காமெடி விதவிதமா சரவெடி - அஞ்சலி

பர்பாமென்ஸ், கிளாமர் என்று தனது தனித்திறமையை காண்பித்து விட்ட அஞ்சலி, தற்போது ஆர்யா, சந்தானத்துடன் இணைந்து நடித்து வரும் சேட்டை படத்தில் சிரிப்பு வெடிகளை கொளுத்திப் போட்டுள்ளாராம். படம் முழுக்க கலகல காமெடி காட்சிகள் என்பதால், தினமும் முன்னதாகவே ஸ்பாட்டுக்கு வந்து ஆர்யா-சந்தானம் செய்யும் காமெடி ரிகர்சலில் தானும் கலந்து கொண்டு பயிற்சி எடுத்து நடித்திருக்கிறார் அஞ்சலி.

அப்படி ரிகர்சல் பார்க்கும்போது, தனது பங்குக்கும் சில காமெடி ட்ராக்குகளை அஞ்சலி எடுத்து விட, அது சந்தானத்துக்கும் ரொம்ப பிடித்து விட்டதாம். அதனால் பாஸ் என்ற பாஸ்கரன் போன்று மீண்டும் ஆர்யாவுடன் கலாய்த்துக்கொண்டிருந்தால் ரசிகர்களுக்கு சலிப்பு தட்டி விடும் என்பதால், இப்படத்தில் அஞ்சலியின் காமெடியையும கலந்து அறுசுவையாக காமெடி காட்சிகளை படைத்திருக்கிறார்களாம். ஆக, இந்த படத்துக்குப்பிறகு அஞ்சலி சிறந்த காமெடி நடிகையாகவும் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்ப்பார் என்கிறார்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget