தமிழகத்தைப் போல வெளிநாடுகளிலும் மோசமில்லாத ஓபனிங் தாண்டவத்துக்கு கிடைத்திருக்கிறது. தயாரிப்பு யு டிவி என்பதால் விமரிசையாகவே யுகே, யுஎஸ்-ஸில் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். யுகே-யில் செப்டம்பர் 28ஆம் தேதி படம் வெளியானது. இங்கு வெளியான அதேநாள். முதல் மூன்று தினங்களில் மொத்தம் 17 திரையிடல்கள். இதில் 4,0520 பவுண்ட்கள் வசூலித்துள்ளது.
நமது ரூபாய் மதிப்பில் 34.54 லட்சங்கள். விக்ரமின் முந்தைய சில படங்களைவிட இது அதிகம்.
யுஎஸ்-ஸிலும் அதே செப்.28 படம் வெளியானது. முதல் மூன்று தின வசூல் உத்தேசமாக 9,0969 அமெரிக்கன் டாலர்கள். இது 29 திரையிடல்களில் கிடைத்த வசூல் ரூபாய் மதிப்பில் 47.65 லட்சங்கள் (இதில் ஐந்து திரையிடல்களின் வசூல் சேர்க்கப்படவில்லை. அதையும் சேர்த்தால் வசூல் அரை கோடியைத் தாண்டும்).
வெளிநாடுகளில் தாண்டவத்தின் ஓபனிங் மோசமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.