ஜோஸ் சுவார்ட்ஸ் இயக்கத்தில் தயாராகியுள்ள, காமெடியும், சஸ்பென்சும் நிறைந்த படம் "பன் சைஸ். விடுமுறையை கொண்டாடுவதற்காக, நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்கு திட்டமிடுகிறார், ஒரு இளம் பெண். அந்த பெண்ணின் தாயாரோ, சகோதரனையும் அழைத்துச் செல்லும்படி கூறுகிறார். சுற்றுலாவுக்கு செல்லும் வழியில், திடீரென அந்த இளம் பெண்ணின் சகோதரன் காணாமல் போகிறான். காணாமல் போன சகோதரனை, தன் நண்பர்களுடன் சேர்ந்து
கண்டுபிடிக்க முயற்சிக்கிறார், அந்த பெண். இது தான், இந்த படத்தின் ஒன்லைன். இந்த சம்பவத்தை, பரபரப்பாகவும், காமெடியாகவும் படமாக்கியுள்ளனர். விக்டோரியா ஜஸ்டிஸ், ஜான் லெவி, தாமஸ் மெக்டனால்டு, செல்சியா ஹான்ட்ஸ் உள்ளிட்டோர், இந்த படத்தில் நடித்துள்ளனர்.