குளியலறையில் வழுக்கி விழுந்த நடிகை!

தமிழ், தெலுங்கு என்று அரை டஜன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ஹன்சிகா. எப்போது சென்னையில் இருக்கிறார், எப்போது ஐதராபாத்தில் இருக்கிறார் என்பது அவருக்கே தெரியாது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், சமீபத்தில் தனது தோழியின் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மும்பை சென்றிருக்கிறார் ஹன்சிகா. சென்னையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு அப்படியே மும்பைக்கு பறந்ததால்
அங்கு சென்ற வேகத்தில் ஸ்டார் ஹோட்டலில் உள்ள பாத்ரூமில் குளிக்க சென்றிருக்கிறார்.

ஆனால் அப்போது அவர் இருந்த வேகத்தில் பாத்ரூமில் குளித்து விட்டு வெளியேறியபோது, எதிர்பாராதவிதமாக வழுக்கி தொப்பென்று கீழே விழுந்து விட்டாராம் ஹன்சிகா. இதனால் பின்பகுதியில் பலத்த அடியாம். சில நிமிடங்கள் வலி தாங்க முடியாமல் துடித்தவருக்கு முதல் உதவி சிகிச்சைகள் அளித்திருக்கிறார்கள். ஆக, கைதாங்கலாக தோழி வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹன்சிகா, ஹோட்டலில் தான் வழுக்கி விழுந்த சமாச்சாரத்தை மறைத்து, படப்பிடிப்பு தளத்தில் தவறி விழுந்து விட்டதாக பொய் சொல்லி அனைவரையும் நம்ப வைத்திருக்கிறார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget