5. Alex Cross
சென்ற வாரம் வெளியான அலெக்ஸ் கிராஸ் பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தைப் பிடித்துவிடுமோ என்ற பயம் அனைவருக்கும் இருந்தது. Tyler Perry என்ற மொக்க பாஸ் நடித்த படம் என்பதால் ஏற்பட்ட பீதி. நல்லவேளையாக அப்படி எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. படத்துக்கு ஐந்தாவது இடம்தான். முதல் மூன்று தினங்களில் 11.4 மில்லியன் அமெரிக்க டாலர்களை இப்படம் வசூலித்துள்ளது.
4. Hotel Transylvania
இந்த அனிமேஷன் படம் எதிர்பார்த்த அளவுக்கு கலெக்சன் செய்யவில்லை என்றாலும் மோசமில்லை. நான்காவது வார இறுதியில் இப்படம் 13 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இதுவரை யுஎஸ்ஏ-யில் இதன் கலெக்சன் 119 மில்லியன் டாலர்கள்.
3. Taken 2
மூன்றாவது வார இறுதியில் டேக்கன் 2, 13.3 மில்லியன் டாலர்களை வசூலித்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. இதுவரை இதன் வசூல் 106 மில்லியன் டாலர்கள்.
2. Argo
இந்தப் படம் இந்தியாவிலும் நல்ல வசூலை பெற்றிருக்கிறது. அமெரிக்காவில் இதன் இரண்டாவது வார இறுதி வசூல் 16.4 மில்லியன் டாலர்கள். சென்ற வார இறுதிவரை இதன் மொத்த வசூல் 43 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
1. Paranormal Activity 4
முதல் பாகம் உலக அளவில் சக்கைப்போடு போட்டது. அதை வைத்து இரண்டு, மூன்று என்று எடுத்து தள்ளினார்கள். மொத்தமும் அவுட். ஆனால் நான்காவது பாகம் அப்படியிருக்காது என்ற உத்தரவாதத்துடன் வந்திருக்கிறது. முதல் இடம் என்றாலும் வசூல் சுமார்தான், முதல் மூன்று நாட்களில் 29 மில்லியன் டாலர்கள். அடுத்த வாரம் இந்த ஹாரர் படத்தின் தலைவிதி தெளிவுற தெரிந்துவிடும்.