சக்கரவர்த்தி திருமகன் சினிமா விமர்சனம்

அடர்ந்த காட்டில் சுற்றுலாவிற்கு வரும் வெள்ளைக்கார ஜோடிகள் ரவுடி கும்பலால் கொலை செய்யப்படுகிறார்கள். இது மாநில பிரச்சினையாக மாறுகிறது. இந்த கொலையை கண்டுபிடிக்க  சி.பி.ஐ. அதிகாரியான சக்கரவர்த்தி  தன் டீமுடன் வருகிறார். கொலை நடந்த இடத்தை பார்வையிடுகிறார். பிறகு தேடுதல் வேட்டை தொடர்கிறது.
இறுதியில் கொலைகார கும்பலை சக்கரவர்த்தி டீம் கண்டுபிடித்ததா? இல்லையா? என்பது க்ளைமாக்ஸ். எம்.ஜி.ஆர். சாயலில் அறிமுகமாகும் நாயகன் சக்கரவர்த்தி  சி.பி.ஐ.அதிகாரி கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். தேடுதல் வேட்டையின் போது சண்டைக் காட்சிகளில் எம்.ஜி.ஆர். போலவே மோதுவது ரசிக்க வைக்கிறது. அதே போல வசனம் பேசும் போதும் நிறுத்தி நிதானமான பேசுவது சிறப்பு. எம்.ஜி.ஆர்.தோற்றம் இருந்தாலும் ஓவர் பில்டப் இல்லாமல் சக்கரவர்த்தி நடித்திருப்பது படத்துக்கு வலிமை சேர்க்கிறது. இவருடன் உதவியாளராக வரும் அமிதா, பிரியங்கா போட்டி போட்டு சக்கரவர்த்தியை காதலிப்பதிலும், கனவு காணும் பாடல் காட்சிகளிலும் கவர்ச்சி மழை பொழிந்து கிளு கிளுப்பை ஏற்படுத்துகிறார்கள். வில்லன் கிங்கார்த்திக் நடப்பில் மிரட்டியிருக்கிறார். இவருடன் வரும் ராக்  நடிப்பிலும் குறையில்லை. மற்றும் அன்பு ராணி, சேது தங்கள் கேரக்டரை நிறைவாக செய்திருக்கிறார்கள். கனகராஜ் ஒளிப்பதிவு பளிச் வீ தஷியின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்திருக்கலாம். சுரேஷ் அர்ஸ் எடிட்டிங் கோர்வை. எழுத்து இயக்கம் ஜி.புருஷோத்தமன். தயாரிப்பு பி.சக்கரவர்த்தி க்ரைம் கதையை த்ரிலர் கலந்து விறு விறுப்பு  குறையாமல் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தயாரிப்பு பி.சக்கரவர்த்தி.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget