உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அழகிய பெண்களின் புகைப்படங்கள், அவர்களின் அணுகுமுறை போன்றவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பிரபலத்தை அழகியாக அறிவிக்கிறது ஜப்பானின் டோக்கியோ டிவி. அதன்படி இந்த ஆண்டு இந்தியாவின் அழகியாக நடிகை நமீதாவை அறிவித்துள்ளது. இந்தியாவின் பிரபல புகைப்பட கலைஞர் கார்த்திக் சீனிவாசன் எடுத்த போட்டோ ஆல்பத்தில் இருந்து நமீதாவின் ஒரு போட்டோவை தேர்வு செய்து இந்த அறிவிப்பை
வெளியிட்டு இருக்கிறது.
இதுகுறித்து அந்த டி.வி., வெளியிட்டுள்ள அறிவிப்புக் கடிதம், யாரி சுகி கோ ஜி - அர்பன் லெஜன்ட்ஸ் ஸ்பெஷல் எனும் தலைப்பில் வரும் நவம்பர் 2-ம் தேதி ஒரு சிறப்பு ஒளிபரப்பை மேற்கொள்கிறோம். இதில் இந்தியாவுக்கான அழகியாக நடிகை நமீதாவை தேர்வு செய்துள்ளோம். உலகின் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சுவாரஸ்யமான உண்மைகள், சம்பவங்களை தொகுத்து வழங்குவதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அழகிகள் பற்றி சிறப்பு நிகழ்ச்சியை வழங்குகிறோம். அழகு என்பது நாட்டுக்கு நாடு எப்படி மாறுபடுகிறது என்பதைக் காட்டுவதுதான் நோக்கம். வரும் நவம்பர் 2-ம்தேதி இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது என்று குறிப்பிட்டுள்ளது.