ஆடுகளம் படத்தில் ஆங்கிலோ இந்திய பெண்ணாக வந்து, ஒவ்வொரு ரசிகர்களின் இதயத்தையும், வெள்ளாவி வைத்து வெளுத்தவர், டாப்சி . இதற்கு பின் இவர் நடித்த, "வந்தான் வென்றான் படம், எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இதனால், இதற்கு பின், எந்த தமிழ் படத்திலும், அவர் நடிக்கவில்லை. ஆனாலும், தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார். "தமிழில் மட்டும் ஏன் இந்த இடைவெளி என்று கேட்டால், "தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என, நான் விரும்பியது இல்லை.
ஆனால், ரசிகர்கள், என்னை நன்கு புரிந்து வைத்துள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள, "மறந்தேன் மன்னித்தேன் படம், எனக்கு புது அனுபவம். இந்த படத்தில், பாவாடை தாவணியில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளேன். படம் வெளியானதும், பாவாடை தாவணியில் என்னுடைய தோற்றத்தை பார்த்து, ரசிகர்கள் ஆச்சர்யப்படுவர். அடுத்ததாக, "ஜஸ் மே பாதூர் என்ற இந்தி படத்தில் நடித்துள்ளேன். இந்த படம், ஜனவரியில் வெளியாக உள்ளது. விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில், ஆர்யா ஜோடியாக புது படம் ஒன்றில் நடிக்கிறேன். சந்தோஷமாகவும், ஜாலியாகவும் இருக்கிறது. நான் ஒரு படத்தில் நடிக்கிறேன் என்றால், கண்டிப்பாக, அந்த படத்தில் நல்ல கதை இருக்கும். அதற்கு நான் உத்தரவாதம் என, அடித்துச் சொல்கிறார், டாப்சி.