வாகை சூடவா, மெளனகுரு, அம்மாவின் கைப்பேசி படங்களில் நடித்துள்ள இனியா, முற்றிலும் குடும்பப்பாங்கான நடிகை, அவர் நவீன சினிமாவுக்கு செட்டாக மாட்டார் என்றொரு கருத்து நிலவுகிறது. அதோடு, கிளாமர் கலந்த கதைகளை அவர் தவிர்த்து வருவதாககூட செய்தி பரவியுள்ளது. ஆனால் இதுபற்றி இனியாவைக்கேட்டால், கவர்ச்சிகரமாக நடிப்பதற்கு ஒருபோதும் நான் மறுப்பு சொன்னதில்லை. நான் நடித்த படங்களைப்பார்த்து இவர் அந்த மாதிரி கதைகளில் நடிக்க மாட்டார் என்று
சினிமாத்துறையினரே முடிவு செய்து விட்டனர் என்கிறார்.
மேலும், ஒரு நடிகை என்கிறபோது ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரத்திற்கு தேவையான பிரதிபலிப்பை வெளிப்படுத்த வேண்டும். அதை சரியான செய்ய நான் தயாராக இருக்கிறேன். கிளாமர் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும்கூட என்கிறார் இனியா. அதேசமயம், கிளாமரிலும் ஒரு லிமிட் வைத்திருப்பேன். அளவுக்கதிகமாக ஆபாசமாக நடிப்பது, படம் பார்ப்பவர்களை அருவருப்படைய செய்வது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. எதையும் ரசிக்கும் அளவுக்குத்தான் வெளிப்படுத்துவேன். அதனால் கிளாமர் கதைகளுடனும் இயக்குனர்கள் என்னை தாராளமாக அணுகலாம் என்கிறார் இனியா.