கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியானதால் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து மறு தேர்வு காலை 10 மணியளவில் துவங்கியது. சுமார் 3,456 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வில், சார்பதிவாளர், நகராட்சி ஆணையர் உட்பட 3,687 பதவிகளுக்கு சுமார் 6.5 லட்சம் மாணவர்கள் போட்டி போடுகின்றனர். காலையில் பொது அறிவு, பொது தமிழ்/பொது ஆங்கிலம் தேர்வும் மதியம் இந்து மதத்தாள் தேர்வும் நடைபெறுகிறது.