நடிகர்கள்: ஜெயகாந்த்-,ஷாசனா இசை: சரண் பிரகாஷ் ஒளிப்பதிவு: குமரன் இயக்கம்: ஜி.ஆர்.ஜெயகாந்த் தயாரிப்பு: தி பட்ஸ் கிரியேஷன்ஸ் அவள் ஒரு ஓட்டப்பந்தய வீராங்கனை. ‘‘இவள் எனக்கு மருமகளாக வந்தால் பெருமைப்படுவேன்’’ என்று ஒரு தாய் தன் மகனிடம் கூறுகிறாள். தாயின் ஆசையை நிறைவேற்ற அந்த மகன், ஓட்டப்பந்தய வீராங்கனையை காதலிக்க ஆரம்பிக்கிறான். அவனை அலட்சியப்படுத்தி வரும் வீராங்கனை ஒருநாள் அவனிடம் ஒரு சவால் விடுகிறாள். என்னை ஓட்டப்பந்தயத்தில் ஜெயித்து விட்டால், உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்’’ என்கிறாள். அவனோ இதய நோயாளி. ஓடினால், மரணம் நிச்சயம். என்றாலும், தாயின் ஆசையை நிறைவேற்ற ஓடுகிறான்.
பந்தயத்தில் அவன் ஜெயித்தானா, இல்லையா? என்பதை கருவாக வைத்து, ‘கருத்த மச்சான்’ என்ற படம் தயாராகி வருகிறது. புதுமுகங்கள் ஜெயகாந்த்-,ஷாசனா கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்க, சரண் பிரகாஷ் இசையமைக்க, குமரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்திருக்கிறார், ஜி.ஆர்.ஜெயகாந்த். தி பட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் ஜி.என்.கிருஸ்துராஜன், ஏ.எம்.ஆனந்தன் ஆகிய இருவரும் தயாரித்து இருக்கிறார்கள். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து பின்னணி இசை சேர்ப்பு நடைபெறுகிறது.