2012-ல் மொத்தம் 168 படங்கள் ரிலீசாகியுள்ளன. முந்தைய ஆண்டுகளில் இவ்வளவு அதிக படங்கள் எப்போதும் ரிலீசாகவில்லை. சிறு பட்ஜெட் படங்கள் கூடுதல் எண்ணிக்கையில் வந்தன. பெரிய பட்ஜெட் படங்களும் நிறைய ரிலீசாயின. இவற்றில் 17 படங்கள் மட்டுமே போட்ட முதலை திரும்ப எடுத்ததாக கூறப்படுகிறது. இதில் சில படங்கள் மெகா ஹிட்டாயின. இன்னும் இப்படங்கள் சராசரிக்கு மேல் லாபம் ஈட்டின. மற்றவை நஷ்டம் இல்லாமல் செலவிட்ட பணத்தை மீட்டு கொடுத்தன.
தியேட்டர் வசூல், டி.வி.க்கு உரிமை வழங்குதல், வெளிநாட்டு உரிமை, பாடல் சி.டி. விற்பனை போன்றவற்றை கணக்கிட்டு பார்க்கையில் நம்பர் ஒன் இடத்தில் 'துப்பாக்கி' இருக்கிறது. விஜய், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் வந்த இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகி இன்னும் ஒடிக்கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் விநியோகஸ்தர்களுக்கு ரூ.60 கோடிவரை லாபம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'சிவாஜி', 'எந்திரன்', படங்களுக்கு பிறகு அதிக வசூல் ஈட்டிய படமாக இது உள்ளது.
'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'சுந்தரபாண்டியன்' படங்கள் செலவு தொகையை காட்டிலும் இரு மடங்கு லாபம் ஈட்டியுள்ளது. 'கும்கி' படமும் இந்த பட்டியலில் இடம்பெரும் என்கின்றனர்.
‘நான் ஈ’, ‘பீட்சா’, ‘கலகலப்பு’ ஆகிய மூன்று படங்களும் சூப்பர் ஹிட்டாக ஓடின. செலவு தொகைக்கு மேல் 50 சதவீதம் லாபம் ஈட்டியுள்ளன. ‘மெரீனா’, ‘மனம் கொத்தி பறவை’, ‘காதலில் சொதப்புவது எப்படி’ ஆகியவை ஹிட் படங்கள் பட்டியலில் உள்ளன. இவை செலவுக்கு மேல் 20 முதல் 30 சதவீதம் வரை லாபம் ஈட்டி உள்ளன.
‘அட்டகத்தி’, ‘வழக்கு எண் 18/9’, ‘நான்’, ‘கழுகு’, ‘சாட்டை’ படங்கள் சுமாராக லாபம் பார்த்துள்ளன. செலவுக்கு மேல் 5 முதல் 10 சதவீதம் வரை கிடைத்துள்ளது. ‘நண்பன்’, ‘நீர்பறவை’ சராசரியாக ஓடிய படங்கள் ஆகும். மேலும் சில படங்கள் செலவை சரிகட்டி உள்ளன. மற்றவை நஷ்டத்தில் ஓடின.