கவர்ச்சியாக நடித்தால் அந்த நடிகை நிஜத்திலும் கொஞ்சம் அப்படி இப்படி இருப்பார் என்று சினிமாவுக்கு வெளியே உள்ளவர்கள் தவறாக எண்ணுவதில் ஒரு லாஜிக் இருக்கிறது. சினிமாவில் இருப்பவரே அப்படி நினைத்தால்....? சார்மி என்றால் கவர்ச்சி, கவர்ச்சி என்றால் சார்மி. ஆந்திராவின் அடித்தட்டு ரசிகனுக்கும் இது தெரியும். அவ்வப்போது லாடம் போன்று தமிழிலும் தலைகாட்டுவார். இவரிடம் கதை கேட்க வரும்படி கூறியிருக்கிறார் தெலுங்கு இயக்குனர் ஹரிஷ் சங்கர்.
கதைக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்ற யோசனையில் ஹரிஷின் அலுவலகத்துக்கு சென்றிருக்கிறார் சார்மி. எத்தனை நாள் அடக்கப்பட்ட வெறியோ... கதை சொல்கிற சாக்கில் சார்மியிடம் எல்லை மீறப் பார்த்திருக்கிறார் ஹரிஷ். சமீபத்தில் அகோரியாக நடித்த சார்மியின் பெர்ஃபாமென்ஸை ஹரிஷ் பார்க்கவில்லை போலிருக்கிறது. பொளோர் என்று கன்னத்தை பழுக்க வைத்து வெளியேறிவிட்டாராம் சார்மி.
இந்த விவகாரம்தான் இப்போது ஆந்திரா முழுக்க அல்லோலப்படுகிறது.