இந்த ஆண்டு கோலிவுட்டை அசத்திய அறிமுக ஹீரோயின்கள்


கோடம்பாக்கத்தில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கில் பெண்கள் நடிக்க வருகிறார்கள். வருகிற யாரும் கேரக்டர் வேடம், நகைச்சுவை அல்லது வில்லி என்றெல்லாம் நினைத்து வருவதில்லை. ஹீரோயினாக வேண்டும் என்பதுதான் அனைவரின் கனவும். ஆனால் ஒரு சிலருக்கு மட்டும்தான் அந்த வாய்ப்பு அமைகிறது. அப்படி வாய்ப்பு பெற்றவர்களில் மிகச் சிலர் மட்டுமே, ஹீரோயின்களாக தொடர்கிறார்கள். மற்றவர்கள் கிடைக்கிற வாய்ப்பில் மின்னப் பார்க்கிறார்கள்...
அல்லது வெளியில் சொல்ல முடியாத இருள் வாழ்க்கைக்குப் போகிறார்கள். கடந்த 2012ல் அறிமுகமான குறிப்பிடத்தக்க ஹீரோயின்கள் சிலரை இங்கே பார்க்கலாம். 

ரிச்சா கங்கோபாத்யாய் 
வங்காள நடிகை. எடுத்த எடுப்பிலேயே செல்வராகவனின் மயக்கம் என்ன படத்தில் அறிமுகம். படம் வெளியான பிறகு நடிக்கத் தெரிந்த அழகான, கவர்ச்சியான நடிகை என்று பெயர் பெற்றார். முதல் படத்துக்கே சர்வதேச அளவில் விருதும் பெற்றார். அடுத்த படம் ஒஸ்தியைப் பார்க்க சகிக்காவிட்டாலும், ரிச்சாவை மட்டும் ரசிக்கலாம் என்று விமர்சனங்கள் வந்தன. ஆனால் அதன் பிறகு வந்த மூன்று பட வாய்ப்புகளை ரிச்சாவே தட்டிக் கழித்துவிட்டார். 

ஸ்வாதி ராட்டினம் 
படத்தில் அறிமுகமான ஸ்வாதிக்கு பூர்வீகம் கேரளா. ராட்டினத்தில் கிடைத்த நல்ல பெயரை அடுத்து வந்த மன்னாரு படத்தில் தக்கவைத்துக் கொண்டார். இப்போது ஒருவர் மீது இருவர் சாய்ந்து உள்பட சில முக்கிய படங்கள் கைவசம். 2013-ல் முக்கிய இடத்தைப் பெற்றும்விடும் நம்பிக்கையில் உள்ளார். 

ஆத்மியா 
எழில் இயக்கத்தில் வந்த மனம் கொத்திப் பறவையில் அறிமுகமாகி ரசிகர்களின் மனம் கொத்தியவர். கிட்டத்தட்ட மீரா ஜாஸ்மின் க்ளோனிங் மாதிரி இருப்பார். முதல் படம் சுமாராகப் போனாலும், அடுத்து வரும் படம் தன்னை நிலைநிறுத்தும் என நம்புகிறார். 

லட்சுமி மேனன் 
2013 ம் ஆண்டின் டாப் நடிகை என்ற இடத்துக்கு வர அதிக வாய்ப்புள்ளவர் என்று தமிழ் திரையுலகப் புள்ளிகளால் புள்ளி வைக்கப்பட்டிருப்பவர் லட்சுமி மேனன்தான். முதல் படம் சுந்தரபாண்டியன் சூப்பர் ஹிட். அடுத்து அவர் நடிப்பில் வந்த கும்கியிலும் மிக நல்ல பெயர். தேதிகள் ஒதுக்க முடியாத அளவுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள். சூர்யா போன்ற முன்னணி நாயகர்களே விரும்பி வாய்ப்பளிக்கிறார்கள். ஆனால் சசிகுமாரும் லிங்குசாமியும் தங்கள் படங்களின் நிரந்தர நாயகியாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.

நந்திதா 
அட்டகத்தியை அத்தனை சீக்கிரம் மறக்காதவர்களுக்கு, அதன் நாயகி நந்திதாவையும் நன்றாக நினைவிருக்கும். களையான முகம். நடிப்பிலும் குறை சொல்ல முடியாது. நான்கு படங்கள் கைவசமிருப்பதால், அடுத்த ஆண்டில் ஒரு ரவுண்ட் வர வாய்ப்புள்ள நடிகை. 

வரலட்சுமி 
சரத்குமாரின் மகள் என்ற டேக்குடன் நடிக்க வந்த வரலட்சுமிக்கு முதல் படம் போடா போடி. அதில் இவரது குரலும் பெருத்த உடலும் மைனஸாக இருந்தது. ஆனால் அவரது பெரிய ப்ளஸ் நடனம். இப்போது விஷால் ஜோடியாக நடித்து வருகிறார். விஷாலுக்கு நிரந்தர ஜோடியாகும் வாய்ப்புள்ளதாக கிசுகிசுக்கப்படுவதால், சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற கட்டாயம் அவருக்கில்லை!!

காயத்ரி 
18 வயசு படத்தில் அறிமுகமானாலும் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படம் மூலம்தான் பிரபலமானார். இவர் பெயரும் கோடம்பாக்கம் படைப்பாளிகள் டைரியில் ஏறிவிட்டது. 

பிந்து மாதவி 
வெப்பம் படத்தில் அறிமுகமானார். கழுகு படத்தில் கவனத்தைக் கவர்ந்தார். இப்போது ஓரளவு முன்னணி நடிகை எனும் அளவுக்கு பெரிய வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.

பூஜா ஹெக்டே 
மிஷ்கினின் முகமூடி பட நாயகியாக அறிமுகமானார். அந்தப் படம் பெரிதாகப் போயிருந்தால் பூஜாவின் ரேஞ்சே வேறு என்கிறார்கள். ஆனால் இவரது உடலமைப்பு இவருக்கு ஒரு மைனஸ்தான். 

பார்வதி ஓமணக்குட்டன் 
இந்த ஆண்டின் பெரிய ப்ளாப் நாயகி என்ற பெயரை பில்லா 2 இவருக்குக் கொடுத்துவிட்டது. ஆனாலும் தளராத மனதுடன் அடுத்த பட வாய்ப்பைப் பெற்றுள்ளார். நதிகள் நனைவதில்லை இவரை காப்பாற்றுமா பார்க்கலாம். 

மனிஷா 
பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 பட நாயகிகளில் ஒருவர். முதல் படமே முத்திரைப் படமாக அமைந்ததில், பெரிய இயக்குநர்களின் பார்வையில் உள்ள ஒரு நாயகி மனிஷா 

ப்ரணிதா 
அருள்நிதியுடன் உதயன் படத்தில் அறிமுகமானாலும், பளிச்சென்ற அடையாளம் தந்தது கார்த்தி நடித்த சகுனிதான். ஆனால் இரண்டுமே தோல்விப் படங்களாகிவிட்டதுதான் அவரது துரதிருஷ்டம் 

தீக்ஷா சேத் 
முதல் படத்திலேயே பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்த நாயகிகளுள் இவரும் ஒருவர். இவரது முதல் படம் விக்ரம் நடித்த ராஜபாட்டை. மனம் சோராமல் இப்போது சிம்புவின் வேட்டை மன்னன் படத்தை நம்பிக் கொண்டிருக்கிறார். 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget