சச்சினின் ஒரு நாள் கிரிக்கெட் சாதனைகள் - நிலவின் பார்வையில்


ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த இதுவரை இல்லாத இனி மேலும் அவரது சாதனைகளை முறியடிப்பது கடினமாகும் ஒரு வீரராக சச்சின் டெண்டுல்கர் நிகழ்த்தாத சாதனைகளே இல்லை எனலாம். அந்த வகையில் அவரது ஒருநாள் கிரிக்கெட் சாதனைகளைப் பற்றிப் பார்ப்போம்:
463 ஒருநாள் போட்டிகளில் 44.83 என்ற மிகச்சிறந்த சராசரியுடன் 18,426 ரன்களை குவித்துள்ளார் ரன் மெஷின், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்.

அதிக போட்டிகள் : 463

அதிக ஆட்ட நாயகன் விருதுகள் : 62

ஒருநாள் தொடர் நாயகன் விருதுகள் : 15

அதிக நாள் கிரிக்கெட்டில் இருந்தது : 22 ஆண்டுகள் 91 நாட்கள்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 15,000 ரன்களுக்கும் மேல், 154 விக்கெட்டுகள், 140 கேட்ச்கள் என்று அரிய டிரிபிள் சாதனை சச்சினுக்கேயிரியது.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் : 18,426 ரன்கள்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்: 49

ஒரே அணிக்கு எதிராக அதிக சதங்கள் : ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக 9 சதங்கள்!

இரண்டு அணிகளுக்கு எதிராக அதிக ஒருநாள் சதங்கள்: ஆஸி.க்கு எதிராக 9, இலங்கைக்கு எதிராக 8;.

50க்கும் மேலான ரன்கள் அதிக முறை: 145; 49 சதங்கள், 96 அரை சதங்கள்.

ஒரே ஆண்டில் அதிக ஒருநாள் போட்டி ரன்கள்: 1894 ரன்கள் (சராசரி 65.31), 34 போட்டிகள் இது நடந்தது 1998ஆம் ஆண்டு.

ஒரே ஆண்டில் 1000 ரன்கள் : சாதனையான 7 முறை.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக 90-கள் - 18 முறை; இது சதமாகியிருந்தால் இன்று சச்சின் சாதனைப் பட்டியல் மேலும் உக்கிரமாகக் காட்சியளிக்கும்.

அதிக பவுண்டரிகள் - 2016 பவுண்டரிகள்

ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள்: 3077 ரன்கள், 71 போட்டிகள், சராசரி 44.59.

இலங்கைக்கு எதிராக அதிகபட்ச ரன்கள் : 3113, (43.84 சராசரி) - 57 போட்டிகள்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக சதங்கள்: 5

பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் : 2,556.

பாகிஸ்தானுக்கு எதிராக அதிக சதங்கள்- 5 (லாராவுடன் பகிருந்து கொள்ளும் ஒரே சாதனை)

ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2010ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி 200 ரன்களை குவித்து சாதனை படைத்தார் சச்சின்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள்: 2,278 சராசரி 56.95, 45 போட்டிகள்.

உலகக் கோப்பை போட்டிகளில் அதிக சதம் - 6 (44 இன்னிங்ஸ்)

ஒரே உலகக் கோப்பையில் அதிகபட்ச ரன்கள்: 673 ரன்கள் 2003 உலகக் கோப்பை, சராசரி 61.18 - 11 ஆட்டங்கள்.

இரண்டு உலகக் கோப்பை போட்டிகளில் மொத்தம் 500 ரன்களுக்கும் அதிகமாக ஸ்கோர் செய்த ஒரே பேட்ஸ்மென் 2003-இல் 673 ரன்கள் 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 7 போட்டிகளில் 523 சராசரி 87.16.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget