கார்த்தி நடிக்கும் புதிய படத்துக்கு சார்பட்டா பரம்பரை என தலைப்பு சூட்டியுள்ளனர். வழக்கம்போல ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் படம் இது. கார்த்தி நடிப்பில் அலெக்ஸ் பாண்டியன் படம் பொங்கல் தினத்தன்று திரைக்கு வரவிருக்கிறது. தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் பிரியாணி என்ற படத்தில் நடித்து வரும் கார்த்தி, அதன் பிறகு ஒருகல் ஒரு கண்ணாடி படம் தந்த ராஜேஷ் எம் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த இரு படங்களும்
முடிந்த பிறகு, கார்த்தி நடிக்க ஒப்புக் கொண்டுள்ள படத்தை அட்டகத்தி படத்தை இயக்கிய ரஞ்சித் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு சார்பட்டா பரம்பரை என்று தலைப்பிட்டுள்ளனர். கார்த்தியின் உறவினர் ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.