Chinese Zodiac (CZ12) - சினிமா விமர்சனம்

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்து கவர்ந்து சென்ற பொருட்கள் ஏராளம் அவற்றில் ஒன்றுதான் விக்டோரியா மகாராணி கொண்டு சென்ன கோகினூர் வைரம். இந்த வைரம் இப்போது இங்கிலாந்து அரசின் வசம்தான் உள்ளது. நியாயப்படி பார்த்தால் அந்த வைரம் இந்தியாவுக்கே மீண்டும் திருப்பித் தரப்பட வேண்டும். ஆனால் அது தரப்படவில்லை. இது குறித்து கண்டனக் குரல்கள் எழுந்தன. ஆனால், ‘கோகினூர் வைரத்தை சட்டப்படி திருப்பித் தருவது என்பது
இயலாத காரியம். கோகினூர் இனி இந்தியாவுக்கு ஒரு காலத்திலும் கிடைக்காது’ என்று பகிரங்கமாக செய்தி வெளியிடுகின்றன இங்கிலாந்தில் உள்ள பத்திரிகைகள். 

எதுக்கு இந்த வரலாறு என்று கேட்கிறீர்களா? CZ12 படத்தின் கதை சொல்வதும் இது போன்று ஒரு நாட்டில் இருந்து கவர்ந்து செல்லப்பட்ட அரிய பொருட்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அந்தந்த நாடுகள் திருப்பித் தர வேண்டும் என்பதுதான்.

பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய பொருட்கள் ஒவ்வொன்றையும் ஏலம் விடும் ஒரு நிறுவனம், சீனாவில் இருந்து ஆங்கிலேயர்களால் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டு செல்லப்பட்ட 12 சிலைகளை, அவை இப்போது யாரிடம் இருந்தாலும் அவற்றை தங்களிடம் கொண்டு வந்து சேர்க்குமாறு ஜாக்கிசானிடம் சொல்கிறது. இதற்கு பெரும் தொகை அவருக்கு கொடுப்பதாக சொல்கிறது அந்த நிறுவனம். அந்த சிலைகளை எப்படியாவது கொண்டு வந்து அவர்களிடம் சேர்க்கும் வேலையில் இறங்குகிறார் ஜாக்கிசான். அந்த சிலைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றி அந்த நிறுவனத்திற்கு கொடுத்தாரா? இல்லையா என்பது க்ளைமேக்ஸ்.

ஜாக்கிசானை துரத்துவதில் ஆரம்பிக்கிறது படம். துரத்துபவர்களிடம் இருந்து அழகாக எஸ்கேப் ஆகி ஜூட் விடுகிறார் ஜாக்கி. ஜாக்கிசான் படங்கள் என்றாலே சண்டைக் காட்சிகள் ரொம்பவே ரசிக்கும்படியாக இருக்கும்; இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. தமிழில் ரொம்பவே ரசிக்கக் கூடிய வகையில் வசனங்களை எழுதியிருக்கிறார்கள். இதனால் பல இடங்களில் வெடிச் சிரிப்பு வரவழைக்கிறது படத்தில் கேரக்டர்கள் பேசும் வசனங்கள்.

காட்டுக்குள் ஜாக்கிசானும் அவருடன் வரும் டீமினரும் கடற் கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்கிற காட்சிகள் பிரமிக்க வைக்கிற அதே நேரத்தில் சிரிக்கவும் வைக்கின்றன. க்ளைமேக்ஸில் வரும் எரிமலை சம்பந்தப்பட்ட காட்சியில் படம் பார்ப்பவர்கள் சீட்டின் நுனிக்கே வந்துவிடுவார்கள். அந்த அளவுக்கு அடுத்து என்ன நடக்குமோ என்கிற எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைக்கிறது க்ளைமேக்ஸ் காட்சி.

ஒவ்வொரு நாட்டிலிருந்தும் இப்படி ஏதாவது ஒரு நாடு கொள்ளை அடித்துக் கொண்டு போன பொருட்கள் ஏராளம். அவற்றை அந்தந்த நாடுகளுக்கே திருப்பித் தர வேண்டும் என்னும் குரலை ஒலிக்கச் செய்த CZ12 படத்தின் இயக்குநரையும் டீமையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget