Google Earth மென்பொருளானது எல்லோரும் அறிந்ததே இந்த மென்பொருளைப் பயன்படுத்தவதாயின் இணைய இணைப்பு அவசியமாகும். இணைய இணைப்பு இல்லாதகணினிகளில் Google Earth மென்பொருளை Install செய்தாலும் பயன்படுத்த முடியாது. உங்கள் அலுவலகத்தில் இருக்கும் கணினியில் இணைய இணைப்பு இருக்கும் ஆனால் அங்கு Google Earth இல் சுதந்திரமாக பயன்படுத்த நேரம் இருக்காது. இப்படியானவர்களுக்கு Google Earth மென்பொருளை இணைய இணைப்பு இல்லாத
கணினியிலும் பயன்படுத்த ஒரு வழி இருக்கிறது. அதுதான் Cache Memory. இந்த Cache Memory இனை Copy செய்து உங்கள் இணைய இணைப்பு இல்லாத கணினியில் Past செய்வதன் மூலம் நீங்கள் Copy செய்த Cache Memory எவ்வளவு உள்ளதோ அதற்கேற்ப பயன்படுத்தலாம்.
இந்த Cache Memory இனை எப்படி Copy செய்வது இது எங்கு இருக்கும்?
முதலில் உங்கள் அலுவலகத்தில் இருக்கும் கணினியில் அல்லது Internet Browsing Center இற்குச் சென்று Google Earth இனை Download செய்து Install செய்து கொள்ளுங்கள். இப்பொழுது Google Earth மூலம் உங்களுக்குத் தேவையான இடங்களை ஒரு தடவை Zoom செய்யுங்கள் (நீங்கள் இப்பொழுது பார்க்கும் இடங்களே Cache Memory இல் பதியப்படுகின்றன.) இனி Streaming 100% என்று முடிந்ததும் Google Earth இனை Close செய்துவிட்டு.
கணினியில் My Computer இனை Open செய்து Tools > Folder Options... > View > Show Hidden File And Folders என்பதை Select செய்து OK இனை அழுத்தவும். (இது கணினியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள Folder களை காட்சிப்படுதுவதற்கான முறையாகும்.)
இனி C:\Documents and Settings\"USER" என்ற இடத்திற்குச் செல்லவும் அங்கு முதலில் Local Settings என்ற Folder இனுள் Application Data\Google\GoogleEarth என்ற Folder இனுள் உள்ள அனைத்து File, Folder களையும் அப்படி உங்களிடமுள்ள Pendrive இல் Copy செய்யவும். அடுத்து மீண்டும் C:\Documents and Settings\"USER" இற்கு வந்து Application Data என்ற Folder இனுள் Google\GoogleEarth என்ற இடத்திற்கு வந்து அங்குள்ள அனைத்து File களையும் Pendrive இல் Copy செய்யவும்.
இனி உங்கள் வீட்டிலுள்ள கணினியில் (இணைய இணைப்பு இல்லாத கணினியில்) Google Earth இனை Install செய்யவும். நீங்கள் Pendrive இல் Copy செய்த File களை உங்கள் கணினியில் முறையே அந்த அந்த சரியான இடங்களில் Past செய்யவும். இப்பொழுது Google Earth இனை Open செய்து பார்க்கவும் நீங்கள் அங்கு Cache Memory யில் இருந்து Copy செய்துவந்த அனைத்து இடங்களையும் பார்க்கக்கூடியதாக இருக்கும்.
இயங்குதளம்: விண்டோஸ் XP / விஸ்டா / 7
Size:23.31MB |