மலையாள இயக்குனர் விநயன். தமிழில் காசி போன்ற சில நல்ல படங்களை எடுத்தவர். முழுக்க முழுக்க குள்ளர்கள் நடிக்க அதிசய தீவு என்ற படத்தையும் எடுத்தார். புதுமையாக எதையாவது செய்து கலெக்ஷனை அள்ளுபவர் என்ற பெயர் விநயனுக்கு உண்டு. அவர் தற்போது இயக்கி வரும் படம் நான்காம் பிறை. தமிழ், மலையாளத்தில் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. ஆர்யன், சுதிர் ஹீரோவாகவும், மோனால், ஸ்ரத்தா தாஸ் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள்.
இவர்கள் தவிர இன்னும் சில ஹீரோயின்களும் படத்தில் இருக்கிறார்கள். அண்மையில் இதன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. 3டி தொழில்நுட்பத்தில் இதன் பாடல்களை பார்த்தவர்கள் மிரண்டு போனார்கள். காரணம் அத்தனை துல்லியமான கிளாரிட்டி இருந்ததோடு கிளாமராகவும் இருந்தது.
நான்காம் பிறை டிராகுலா வகையைச் சேர்ந்த பேய் படம் என்று விநயன் சொன்னாலும், உண்மையில் இது கவர்ச்சிப் படமாம். டிராகுலாவாக நடித்திருக்கும் சுதிர் ஒவ்வொரு பெண்ணாக மயக்கி அவர்களுடன் உறவு கொண்டு அவர்களையும் டிராகுலா ஆக்குவதுதான் கதை. மெயின் ஹீரோயின்கள் தவிர மூன்று துணை ஹீரோயின்களும் இருக்கிறார்கள். ஒவ்வொருவருடனும் ஒரு கவர்ச்சி பாட்டு, ஒரு படுக்கை அறைக் காட்சி என படம் முழுக்க கவர்ச்சி மழைதானாம். தற்போது வெளிவந்துள்ள படத்தின் போட்டோக்களே படு கவர்ச்சியாக உள்ளது. படத்தில் இதுபோல இரு மடங்கு கவர்ச்சியாக உள்ளதாம். படுக்கை அறைக் காட்சிகளும், கவர்ச்சியான பாடல் காட்சிகளும் பக்கத்தில் இருந்து நேரில் பார்ப்பது மாதிரியான உணர்வை ஏற்படுத்துமாம். இது இதுவரை ரசிகர்கள் அனுபவத்திராத புது அனுபவமாக இருக்குமாம். கோடை விடுமுறையில் ரசிகர்களை சூடேற்றி கலெக்ஷனை அள்ளுவதுதான் விநயனின் திட்டம் என்கிறார்கள். கேரளாவில் இப்போதே இதுகுறித்த சர்ச்சைகள் உருவாகி விட்டது. 3டி படத்துக்கென்று தணிக்கை விதிகளில் மாற்றம் வேண்டும் என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.