The Women சினிமா விமர்சனம்

“மகளிர் மட்டும்” என்று சொல்லி ஒரு படம் வந்தது ஞாபகம் இருக்கும்; என்றாலும் இந்தப் படம்தான் மகளிர் மட்டும் என்பதற்கு வரைவிலக்கணம். படத்தில் மருந்துக்கும் ஆண் வாடை இல்லை! அட, கதாநாயகி வீட்டில் இருக்கும் நாய் கூட பெண் நாய்தான்!! அப்பிடி ஒரு படத்தை துணிந்து எடுத்திருக்கின்றார்கள். நல்ல முயற்சிதான்; பிழைப்பது என்னவென்றால், இப்படியான ஒரு நடிகர் குழுவை வைத்து எடுக்கக்கூடிய கதைகள் ஒரு குறுகிய வட்டத்தினுள்தான் இருக்கமுடியும் என்பது. விளைவு, இனிமேல் இல்லையென்ற ஒரு Chick-flick கதை.

நான்கு ஆத்மாந்த நண்பிகள் — குடும்பத்தலைவி Mary; வேலையில் இளஞர் பட்டாளத்திற்கு ஈடு கொடுக்க சிரமப் பட்டுக்கொண்டிருக்கும் Sylvia; பிள்ளைபெறும் தொழிற்சாலை போல Edie; மற்றும் அடுத்த புதிய நாவலை எழுத கைவராது தடுமாறிக்கொண்டிருக்கும் எழுத்தாளர் Alex. கதை பெரும்பாலும் Mary’ஐச் சுற்றிப் போகின்றது. மணவாழ்க்கைக்காக சொந்த வாழ்வின் அபிலாசைகளை உதறிவிட்டு இருக்கும் Mary’இன் கணவன், ஒரு ஒப்பனைக் கடை பெண் ஒருத்தியுடன் கள்ளத்தொடர்பு கொளவதும், அதைத் தொடர்ந்து Mary’யின் வாழ்வு தலை கீழாவதும், நண்பிகளுடன் துணையுடன் அதை மீண்டும் சீராக்குவதும் கதை.

படத்தில் இருப்பது எல்லாரும் பெண்கள் என்பதால் பார்க்க நன்றாக இருக்கும் என்று ஜொள்ளு வடித்துக் கொண்டு பார்க்கப் போகும் ஆண்களிற்கு எச்சரிக்கை; படத்தின் நாயகிகள் எல்லாம் பெரும்பாலும் கடந்த வம்சாவழி நாயகிகள், பெரும்பாலும் இளமையைக் கடந்தவர்கள். கதையமைப்பு பெண்களிற்குத்தான் பிடிக்க வேண்டும். இருந்தாலும் பெரிய புதியதான கதையில்லை என்பதால் பெண்களையும் எவ்வளவு தூரம் கவரும் என்று தெரியவில்லை. முற்று முழுதாக பெண்களை வைத்து எடுக்கப் பட்டு இருக்கும் அந்த புதிய முயற்சிக்காகப் பார்க்கலாம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget