முதல் இன்னிங்சை போலவே, இரண்டாவது இன்னிங்சிலும் ஹீரோயினாகவே நடிப்பது மட்டுமின்றி, ஒரு பாட்டுக்கு, முன்னணி ஹீரோக்களுடன் நடனம் ஆடுவதையும், தொடர்ந்து வருகிறார் நயன்தாரா. அந்த வரிசையில், ஏற்கனவே ரஜினியுடன்,"சிவாஜி விஜயுடன், "சிவகாசி போன்ற படங்களில் ஒரு பாட்டுக்கு நடனமாடிய நயன்தாரா, இப்போது, தனுசுடன் இணைந்து, ஒரு பாட்டுக்கு நடனமாடுகிறார்.
இதற்கு முன் எழுதி, பாடி நடித்த, "கொலைவெறி பாடலைப்போன்று, இந்த பாடலையும் தனுஷே எழுதிபாடியிருப்பதால், பாடலுக்கு எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என்று, பிரமாண்ட அரங்கில் படப்பிடிப்பு நடக்கிறது. கூடவே தனுஷ் - நயன்தாரா இருவருமே சிறந்த நடன கலைஞர்கள் என்பதால், இப்பாடல் புதுமையான நடன அசைவுகளுடன் படமாகிறதாம்.