நாம் கணிணியில் இணைய இணைப்பைப் பயன்படுத்த மொபைல், பிராண்ட்பேண்ட், வயர்லெஸ், டேட்டா கார்டுகள் போன்ற சாதனங்களை பயன்படுத்துகிறோம். நாம் ஒரு இணைப்பில் ஒரே கணிணியை மட்டுமே பயன்படுத்துவோம். ஒன்றுக்கு மேற்பட்ட கணிணிகளில் இணைக்க வேண்டுமெனில் நெட்வொர்க் கேபிளை பயன்படுத்த வேண்டுன். இதை விட இலகுவான வழியை இந்த மென்பொருள் செய்து கொடுக்கிறது. Win Hotspot என்ற இந்த
மென்பொருளின் மூலம் உங்கள் கணிணியில் நீங்கள் பயன்படுத்தும் எந்தவொரு இணைய இணைப்பையும் கேபிள்கள் இல்லாமல் பல கணிணிகளில் பகிர்ந்து கொண்டு பயன்படுத்த முடியும். இதற்கு உங்கள் கணிணியில் விண்டோஸ் 7 நிறுவப்பட்டிருக்க வேண்டும். மேலும் கணிணியில் வயர்லெஸ் சேவையைத் தரும் வயர்லெஸ் அடாப்டர் நிறுவப்பட்டிருக்க வேண்டும். லேப்டாப்பில் வயர்லெஸ் சேவை இணைந்தே தான் வருகிறது. டெஸ்க்டாப் என்றால் வயர்லெஸ் ரூட்டர் தனியாக போட்டிருக்க வேண்டும்.
இயங்குதளம்: விண்டோஸ் 7/8 (32-Bit/64-Bit)
Size:154.5KB |