நீண்ட காலத்தின் பின்னர் Demi Moore‘இன் ஒரு படம். படம் 1960ஆம் ஆண்டில் லண்டனில் நடப்பதாக எடுக்கப்பட்டுள்ளது. “London Diamonds” என்பது உலகின் பிரதான வைரக்கல் மையம். தென்னாபிரிக்காவின் பல சுரங்கங்களிருந்தும் வைரக்கல்லை கொள்ளூபடி செய்து உலகின் பலபாகங்களிற்கும் சந்தைப்படுத்தும் நிறுவனம். மில்லியன் கணக்கில் காசு புரளும் இந்த நிறுவனத்தில் பகுதி நிர்வாகியாக இருப்பவர் Laura (Demi Moore). வேலையில் முன்னேறுவதற்காக
லௌகீக வாழ்க்கையைத் துறந்து வாழ்வில் நடுப்பகுதியில் தனிமரமாக நின்றாலும், பெண்ணென்ற ஒரே காரணத்திற்காக வேலையில் இவரது முன்னேற்றம் தொடர்ந்து ஓரம் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது. கடைசியாக நிர்வாகத்தின் சுயநலத்திற்காக இவரை வேலையிலிருந்து தூக்கவும் திட்டம் தீட்டப்படுகின்றது. இவ்வாற தருணத்தில் “London Diamonds”ஐ சூறையாடுவதற்கான திட்டத்தோடு வருகின்றார் Mr. Hobbs (Michael Caine). இவர் அதே நிறுவனத்தில் கூட்டித் துடைக்கும் வேலை பார்க்கும் வயது போன ஒரு தொழிலாளி. வாழ்க்கையில் விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் Laura இதற்கு சம்மதிக்கின்றார். இவர்களது திட்டமிடல், கொள்ளை, அதற்கு பின்பு வரும் சுவார்சியமான திருப்பம் என்று படம் போகின்றது.
படத்தின் இரு பிரதான நடிகர்கள்களும் நேர்த்தியாக தங்கள் பணிகளைச் செய்திருக்கின்றார்கள். கதையில் வரும் அந்த ஒரு திருப்பம் மிகவும் நன்றாக இருந்தாலும், அதிலிருக்கும் மர்மத்தை அவிழ்ப்பதற்கு எனக்கு நேரம் எதுவும் எடுக்கவுல்லை. ஏன் தான் படத்தில் இருக்கும் அத்னை பேரும் அவ்வளவு குழம்பியிருக்கின்றார்களோ தெரியாது. அலுப்பில்லாத படம், ஆனால் மிகவும் விறு விறுப்பான படம் என்றும் சொல்லுவதற்கில்லை.
படத்தில் முதிய Demi Mooreஇன் ஒப்பனை அந்தமாதிரி. இளம் Demi Mooreஐக் காட்டும் முதலாவது காட்சியில் வரும் பின்னணி இசை ஏதோ ஒரு பாடலை ஞாபகப் படுத்தியது – எதுவென்று இனங்கண்டுகொள்ள முடியவில்லை. உங்கள் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லவும்.