நடிப்பு : துருவ், மாடல்ஷா, விவேக், கனிஷ்கா, செல் முருகன், அல்வா வாசு, கோகுல் மற்றும் பலர்.
பாடல்கள் : சிவகாசி ஸ்ரீதர், நிஷாந்த்
நடனம் : எஸ்.எல். பாலாஜி, ரமேஷ் ரெட்டி
இசை : கே.எஸ். மனோஜ் – ஜி.டி. பிரசாத்
ஒளிப்பதிவு : சி.எச். ராஜ்குமார்
சண்டைப் பயிற்சி : சங்கர்
படத்தொகுப்பு : சுஜித் சகாதேவ்
இயக்கம் : சீனிவாசன் சுந்தர்
தயாரிப்பு : மாயா கிரியேஷன்ஸ் - முக்தா வி. சீனிவாசன்
நாயகி கனிஷ்கா பணக்கார வீட்டு பெண். இவர் பணம், வைரநகைகள், பவுன் நிறைந்த பெட்டி ஒன்றை எடுத்து வருகிறார். இதன் மதிப்பு பத்தாயிரம் கோடி. இந்த பெட்டியை நாயகன் துருவ் மற்றும் இவரது நண்பர்கள் நாயகி மடால்ஷா ஆகியோர் கெமிக்கல் புகையை தூவி அதன் மூலம் மனித உருவத்தை மாயமாக்கிறார்கள். இந்த சக்தியை பயன்படுத்தி பத்தாயிரம் கோடி மதிப்புள்ள பெட்டியை கைப்பற்றுகிறார்கள். இவர்களை பிடிக்க சங்கர்லால் என்ற பெயரில் போலீஸ் அதிகாரி விவேக் தன் குழுவுடன் களமிறங்குகிறார். பணக்கார பெண்ணுக்கு ஆசைபட்டு அந்த இளைஞர்களை பின்பற்றுகிறார். ஒரு கட்டத்தில் பெட்டி விவேக் வசம் சிக்குகிறது. இதைகண்டு துருவ் குருப் கெமிக்கல் ஆவியை பயன்படுத்தி பெட்டியை விவேக்கிடமிருந்து மீண்டும் கைப்பற்றுகிறார்கள். இறுதியில் பணப்பெட்டி யாரிடம் சிக்கியது. விவேக் திட்டமிட்டபடி பெட்டியை மீட்டுக்கொடுத்து பணக்கார பெண்ணிடம் நல்ல பெயர் எடுத்தாரா? இல்லையா? என்பது க்ளைமாக்ஸ்.
தமிழ் சினிமாவில் புதிய கோணத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டு உருவாகி இருக்கும் படம் பத்தாயிரம் கோடி. நாயகன் துருவ், அவருடன் வரும் நண்பர்கள் காட்சியை ரசிக்கும்படி செய்திருக்கிறார்கள். முதல் நாயகி மடால்ஷா கண்களுக்கு குளிர்ச்சி. இரண்டாவது நாயகி கனிஷ்கா பணக்கார பெண்ணுக்கு பொருத்தமான தேர்வு. கவர்ச்சியாக பாடல் காட்சியில் தோன்றி பட்டையை கிளப்புகிறார். கெமிக்கல் ஆவியை மனித உருவத்தில் தூவியதும் உருவம் மாயமாகி போவதும், அதே போல பணப்பெட்டி மாயமாகி அதை இழுத்துக்கொண்டு செல்லும் போது ஏற்படும் தடயம் ரசிக்க வைக்கிறது. விவேக் காமெடி காட்சிகள் படத்துக்கு பலம். இவருடன் செல்முருகன், அல்வாவாசு, தியாகு, கோகுல் என அனைவரும் தங்களது பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
கே.எஸ்.மனோஜ் ஜி.டிபிரசாத் ஆகியோர் இசையில் பாடல்கள் ரசிக்கலாம். அதோடு உருவம் இல்லாத பொருளுக்கு இடத்திற்கு ஏற்ப ஒலி கொடுத்திருப்பது அருமை. அப்போது தான் காட்சியை உணர முடிகிறது. சி.எச்.ராஜ்குமார் ஒளிப்பதிவு காட்சிகளை பளிச்சிட வைக்கிறது. பாடல்கள் சிவகாசி ஸ்ரீதர், நிஷாந்த், எடிட்டிங் அஜித் சகாதேவ், கோர்வை, மற்றும் விறுவிறுப்பை தருகிறது.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், சீனிவாசன் சுந்தர் மாயா கிரியேஷன்ஸ் முக்தா சீனிவாசன் வழங்க தயாரித்துள்ளார். என்.ஆர்.சீனிவாசன் சிறுவர்கள் பார்த்து மகிழ வேண்டிய படம் பத்தாயிரம் கோடி.