பெர்சனல் கம்ப்யூட்டர்கள் வைத்திருப்போர் ஆண்டி வைரஸ் புரோகிராம்களைத் தங்கள் கம்ப்யூட்டர்களில் இன்ஸ்டால் செய்திருக்கிறர்களோ இல்லையோ அவற்றைப் பற்றி நிச்சயம் கேட்டிருப்பார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் வைரஸ்கள் பெருகுவதும் அதிகரித்து உள்ளது; அவற்றிற்கு எதிரான நடவடிக்கைகளும் கூடுதலாகி உள்ளன. இந்த போராட்டத்தில் வைரஸ் எதிர்ப்பு தொகுப்புகளை விற்பனை செய்திடும் நிறுவனங்களும்
தாங்கள் எப்படி மற்றவர்களைக் காட்டிலும் சிறந்த தொகுப்பினை அளிக்கிறோம் என்பது குறித்து தொடர்ந்து விளம்பரங்களை அளித்து வருகின்றன. இந்த பல முனைப் போராட்டம் கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் இருக்கும் வரை நடந்து கொண்டு தான் இருக்கும் . இந்த கட்டுரையில் ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் எந்த வழி வகைகளில் வைரஸ்களைக் கண்டறிந்து அழிக்கின்றன; கம்ப்யூட்டரைப் பாதுகாக்கின்றன என்று காணலாம்.
அடிப்படைச் செயல்பாட்டின் முதல் கட்டமாக ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் உங்கள் டவுண்லோடிங் புரோகிராம்களையும் இமெயில்களையும் ஸ்கேன் செய்த பின்னரே கம்ப்யூட்டரில் ஏற்றுக் கொள்கின்றன. இவ்வாறு ஸ்கேன் செய்திடுகையில் அவை என்ன எதிர்பார்க்கின்றன? ஸ்கேன் என்பது இங்கு எதனைக் குறிக்கிறது? இந்த புரோகிராம்கள் மேற்கொள்ளும் ஸ்கேன் செயல்பாட்டினை இரண்டு வகைகளாகக் குறிப்பிடுகின்றனர். அவை – “Specific” மற்றும் “Generic” . ஒவ்வொரு ஆய்வும் குறிப்பிட்ட வகை வைரஸ் குறியீடுகளை எதிர்பார்த்து மேற்கொள்ளும் ஸ்கேன் செயல்பாடுகளாகும்.
ஆண்டி வைரஸ் புரோகிராமில் முதல் பாதுகாப்பு வளையத்தில் வைரஸ் குறித்த விளக்க குறியீடுகள், சிக்னேச்சர் என்று சொல்லப்படும் குறியீடுகள் மற்றும் அப்டேட்டட் பைல் தரும் தகவல்கள் ஆகியவை இடம் பெறுகின்றன. இவற்றில் எதிர்பார்க்கப்படும் வைரஸ் புரோகிராமில் இருக்கக் கூடிய குறியீடுகள் இருப்பதனால் அவற்றுடன் டவுண்லோட் ஆகும் புரோகிராம் அல்லது இமெயில் மெசேஜ்களில் இந்த குறியீடுகள் இருக்கும் பட்சத்தில் அவை ஒதுக்கப்படுகின்றன. இதனைத்தான் “Specific” ஸ்கேனிங் எனக் குறிப்பிடுகிறோம்.
ஒத்த குறியீடுகள் உள்ள வைரஸ் புரோகிராம்களை உணர்ந்து அறியும்போது அந்த கட்டமைப்பு அப்படியே ஆண்டி வைரஸ் புரோகிராமில் பதியப்பட்டு அடுத்த ஸ்கேனிங் போது பயன்படுத்த வைக்கப்படுகிறது. இதனை ஒத்து வரும் பிற புரோகிராம்கள் கண்டறியப்பட இவை பெரிதும் உதவுகின்றன. வைரஸ் எப்படி அமைக்கப்படலாம் என்று குறியீடு எழுதுவதனையே வைரஸ் விளக்கக் குறியீடுகள் எனக் குறிப்பிடுகிறோம். இவை ஏற்கனவே அறியப்பட்ட வைரஸ் புரோகிராம்களின் குறியீடுகளுக்குத்தான் பயன்படுத்த முடியும். புதிய குறியீடுகளின் அடிப்படையில் எழுதப்படும் புதிய வைரஸ் புரோகிராம்களை எப்படி கண்டறிவது? புதிய வைரஸ்கள் புற்றீசல் போல் பெருகுகின்றன.
இவற்றை என்று அடையாளம் கண்டறிந்து ஒத்த குறியீடுகளை எழுதி அழிப்பது?
இங்கு தான் “Generic” ஸ்கேனிங் உதவுகிறது. இந்த வகை ஸ்கேனிங் முறையில் ஒத்துப் போகக் கூடிய குறியீடுகளை மட்டும் தேடாமல் சந்தேகப்படும் குறியீடுகளும் தேடப்படுகின்றன. ஆய்வு செய்யப்பட்ட குறியீடுகளைக் கொண்டு ஆண்டி வைரஸ் புரோகிராம் அதன் கட்டமைப்பு குறித்து ஒரு முடிவுக்கு வருகிறது. இந்த வகைக் கட்டமைப்பு வைரஸாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு அடுத்த நிலை ஆய்வுக்கு அனுப்புகிறது. இது முற்றிலும் சரியானது என்று சொல்ல முடியாது.
எடுத்துக் காட்டாக ஏதேனும் ஒரு புதிய சாப்ட்வேர் புரோகிராமினை நாம் இன்ஸ்டால் செய்திட முயன்றால் அது புதிய வகையாக இருப்பதால் அந்த புரோகிராமில் உள்ள பைல் வைரஸாக இருக்கலாம் என்று ஆண்டி வைரஸ் புரோகிராம் எச்சரிக்கை செய்தி தரலாம். ஏன், பைலையே அழிக்க முயற்சிக்கலாம். இதற்காகத்தான் புதிய புரோகிராம்களை நிறுவுகையில் ஆண்டி வைரஸ் புரோகிராம் இயக்கத்தினை முடக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சந்தேகப்படும் படி அமைப்பு கொண்ட புரோகிராம் பைல்கள் ஆண்டி வைரஸ் புரோகிராமினால் ஒதுக்கப்பட்டு அடுத்த நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று குறிப்பிட்டோம் அல்லவா. இந்த நிலையில் இன்னொரு வகை சோதனை நடத்தப்படும். சந்தேகப்படும் புரோகிராமினை கம்ப்யூட்டருக்குள் ளேயே தனியே மற்றவற்றிற்குப் பாதிப்பு இல்லாத வகையில் ஆண்டி வைரஸ் புரோகிராம் இயக்கிப் பார்க்கும். சந்தேகப்பட்ட குறியீட்டு வரிகள் எவ்வாறு இயங்குகின்றன: அவற்றின் நோக்கம் என்ன என்று கண்காணித்து, பின் அந்த இயக்கத்தை நிறுத்தி, அதனை அனுமதிக்கலாமா அல்லது தடுக்கலாமா என்று முடிவு செய்து செயல்படும்.
மேலே குறிப்பிட்ட வகைகளில் மட்டுமின்றி நவீன தொழில் நுட்பம் தரும் வேறு சில வகைகளையும் இந்த ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் பயன்படுத்துகின்றன. நாளுக்கு நாள் புதிய வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் உருவாக்கப்படுகின்றன. இருந்தாலும் வைரஸ்கள் வருவதும் நிற்கவில்லை. இந்த போராட்டம் தொடர்வதால் தான் ஒவ்வொரு பெர்சனல் கம்ப்யூட்டரும் அவசியம் ஒரு ஆண்டி வைரஸ் புரோகிராமினை அமைத்து அவ்வப்போது அப்டேட் செய்து இயக்குவது பாதுகாப்பானது என்று அறிவுறுத்தப்படுகிறது.
- AVG AntiVirus Free 2013 - இலவச வைரஸ் தடுப்பு மென்பொருள் 13.0
- AVG LinkScanner - வைரஸ் தடுப்பு மென்பொருள் 2013.2899
- BitDefender Free Edition - நச்சு நிரல் எதிர்ப்பு மென்பொருள்
- Comodo Antivirus - கணினி பாதுகாப்பு மென்பொருள் 2012
- Dr.Web CureIt - ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மென்பொருள் 8.0
- Dr.Web LiveCD - தீம்பொருள் எதிர்ப்பு மென்பொருள் 6.0.2
- FortiClient - ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்
- Kaseya Antivirus - நச்சு நிரல் எதிர்ப்பு மென்பொருள்
- KingSoft Office Suite Free - அலுவலக உபயோக மென்பொருள் 2012
- Kingsoft Antivirus - ஆண்ட்டி வைரஸ் மென்பொருள் 2012
- McAfee AVERT Stinger - வைரஸ் தடுப்பு பாதுகாப்பு மென்பொருள் 10.2.0.934
- NANO AntiVirus - நச்சு நிரல் எதிர்ப்பு மென்பொருள்
- Norman Malware Cleaner - தீம்பொருள் எதிர்ப்பு மென்பொருள் 2013.02.16 - New !!
- Panda Cloud Antivirus - க்ளவுட் கம்ப்யூட்டிங் ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்
- Rising Antivirus - நச்சு நிரல் தடுப்பு மென்பொருள்
- UnThreat Free Antivirus - வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் 2013