நினைத்த நேரத்தில், நினைத்த இடத்துக்கு போகலாம், குறுகலான சந்துகளில் கூட வண்டியை செலுத்தலாம், பேருந்துகளுக்கு கால் கடுக்க நிற்க வேண்டியதில்லை என இரு சக்கர வாகனம் வைத்திருப்பதன் சாதகங்கள் ஏராளம். ஆனால், இரு மாதங்களுக்கு ஒரு முறை பெட்ரோல் விலை ஏறி வருவதை நினைக்கும் போது, பைக்கை விற்று விடலாமா என்று கூட பலர் யோசிப்பது உண்டு. இரு சக்கர வாகனத்தை விற்று விடுவதாலோ, உபயோகிக்காமல் இருப்பதாலோ
மேற்கூறிய சவுகரியங்களை நாம் விட்டுக் கொடுக்க நேரிடுமே. பெட்ரோலை சிக்கனமாக பயன்படுத்துவது மூலம் டூ வீலர்களில் நாம் சிட்டாக பறக்கலாம்.
பெட்ரோல் டீசல் சேமிக்க டிப்ஸ்
1. வாகனங்களின் டயர்களில் சரியான காற்றழுத்ததை சீராக பராமரிப்பு மிகவும் அவசியம். அதிகப்படியான காற்று அல்லது குறைவான காற்று போன்ற காரணங்களால் மைலேஜ் கிடைக்காது மற்றும் டயர்களை பாதிக்கும்.நிறுவனத்தார் கொடுத்த காற்றழுத்ததை மட்டுமே பராமரிக்க வேண்டும்.
2. புதிய டயர்கள் மாற்றும்பொழுது வாகன தயாரிப்பாளர் பரிந்துரைத்த டயர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
3. காலை நேரங்களில் மட்டும் எரிபொருளினை நிரப்ப முயற்சியுங்கள். எரிபொருளின் ஸ்பெசிபிக் க்ராவிட்டி(specific gravity) காலை நேரங்களில் அதிகமாக இருக்கும்.
4. எரிபொருள் கலனில் எப்பொழுதும் அறை பங்கிற்க்கு மேல் எரிபொருள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இதனால் எரிபொருள் சரியான அழுத்ததில் செல்ல பெரிதும் உதவும்.
5. வாகனத்தின் பராமரிப்பு மிகவும் அவசியமாகும். சரியான கால இடைவெளியில் பராமரித்தால் தேவையற்ற செலவுகளை தவர்க்கலாம். வாகனத்தின் செயல்திறனும் சிறப்பாக இருக்கும்.
6. எக்காரணம் கொண்டு தயாரிப்பாளர் பரிந்துரைக்காத எரிபொருள்,அடிட்டீவஸ் பயன்படுத்தாதீர்கள்.
7. வாகனத்தை இயக்கும் பொழுது தேவையான அளவே அக்ஸிலேட்ர்களை கொடுங்கள். திடீரென அதிகப்படியான அக்ஸிலேட்ர் கொடுப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது. பிரேக் பிடிப்பதில் கவனம் கொள்ளுங்கள் அக்ஸிலேட்டர் கொடுத்தவுடன் உடனடியாக பிரேக் கொடுக்காதீர். சிக்னல்களில் திடீரென வேகம் எடுக்காதீர்கள். சீரான வேகத்திலே வாகனத்தை இயக்குங்கள்.
8. அதிவேகம் மிகுந்த ஆபத்தானவை அதேபோல எரிபொருளும் அதிகம் தேவைப்படும். டாப் க்யரிலும் மெதுவாக செல்வது எரிபொருளை சேமிக்க உதவும்.சராசரியாக 50-60 கீமி வேகத்தில் பயணிக்க முயலுங்கள்.
9. 2 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்தால் வாகனத்தை அனைத்து விடுங்கள்.
10. க்ளட்ச் மீது க்யர் மாற்றும்பொழுது மட்டுமே காலினை பயன்படுத்தவும்.
11. டூ வீலர்களையும் சரி, காரையும் சரி மிக அதிக வேகத்தில் ஓட்டக் கூடாது (100 கிமீ மேல்). அது நம் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதோடு, பெட்ரோலையும் உறிஞ்சி விடும். வாகனத்தை மிக மெதுவாக ஓட்டினாலும் இதே கதிதான். அதனால் மிதமான வேகத்தில் (55 முதல் 60 கிமி வேகம்) வண்டியை ஓட்டுவது நல்லது.
12. அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும் போது வண்டி ஓட்டுவதை ஓரளவு தவிர்க்க முயற்சிக்கலாம்.
13. சிக்னல்களில் வண்டி என்ஜினை ஆஃப் செய்து விடுவது பெட்ரோலை சேமிக்க பெரிதும் உதவும்.
14. வண்டி ஸ்டார்ட் செய்தவுடனேயே ஆக்சிலேட்டரை முறுக்கி சீறி பாயாமல், படிபடியாக வேகத்தை அதிகரிப்பதால் பெட்ரோல் அனாவசியமாக வீணாவதை தடுக்கலாம்.
15. அடிக்கடி கியர் மாற்றுவதையும் தவிர்த்தால் நன்மை பயக்கும்.
16. டயரின் காற்றழுத்தத்தை அடிக்கடி பரிசோதித்து கொள்ள வேண்டும். டயரில் காற்று கம்மியாக இருந்தால் பெட்ரோல் காலி.
17. திடீரென ஆக்சிலேட்டரை அதிகரிக்கவோ, இறக்கவோ கூடாது.
18. சென்னை போன்ற நகரங்களை பொருத்த வரை, அடிக்கடி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப் படுகின்றன. அத்தகைய மாற்றங்களை நாளிதழ் வாயிலாகவோ, எப்.எம். ரேடியோக்கள் மூலமாகவோ தெரிந்து வைத்திருங்கள். நாம் போகும் இடத்துக்கு தெளிவாக ரூட்டை தெரிந்து வைத்திருப்பதன் மூலம் அனாவசியமாக சுற்றி பெட்ரோல் வீணடிப்பதை தவிர்க்கலாம்.
19. முடிந்த அளவு காலை நேரங்களில் டாங்கை நிரப்புவது நல்லது.
20. டாங்கில் தேவையான அளவு பெட்ரோலை நிரப்பினால் போதும். அதிகப்படியாக பெட்ரோல் இருந்தால் ஆவியாகி விடும்.
தொடர்ந்து நிலையான வேகத்தை பயன்படுத்துங்கள். இவையெல்லாம் நமக்கு ஏற்கனவே தெரியாமல் இல்லை. இருந்தாலும் அடுத்த தடவை வண்டி எடுக்கும் போது இவற்றை கொஞ்சம் ஞாபகம் வைத்திருந்தால் பெட்ரோல் விலை ஏற்றம் கொடுத்துள்ள அளவில்லா சுமையை குறைக்கலாம்.