அனைத்து மொபைல்களிலும் செயல்படும் தமிழில் மெனுக்கள் அடங்கிய புதிய தமிழ் பிரௌசரினை BOLT வழங்கியுள்ளது . மொபைலில் ஓபராமினி பிரௌசர் மூலம் தமிழ் தளங்களை காணமுடிந்தாலும் முழுவதுமான கணினி அனுபவத்தை தருவது இல்லை ஆனால் BOLT வழங்கியுள்ள BOLT Indic தமிழ் பிரௌசர் மூலம் பிரௌசிங் செய்வது கணினி அனுபவத்தை தருகிறது மேலும் இது தமிழில் மெனுக்கள் அடங்கியுள்ளதால் பிரௌசிங் செய்ய ஆங்கில
அறிவு தேவையில்லை தமிழ் தெரிந்த யார் வேண்டுமானாலும் இனையத்தை பயன்படுத்தி பயன் பெற முடியும்.
சிறப்பம்சம் : இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற இந்திய மொழிகளையும் ஆதரிக்கிறது
இன்ஸ்டால் செய்யும் வழிமுறைகள் : அனைத்து ஜாவா மொபைல்களிலும் சிறப்பாக இயங்கும் BOLT Indic பிரௌசரினை டவுன் லோடு செய்து கொள்ளுங்கள் .
தமிழ் மொழியினை ஆக்டிவேட் செய்யும் முறை : BOLT வழங்கும் BOLT Indic பிரௌசரினை இன்ஸ்டால் செய்தால் அதில் மெனுக்கள் ஆங்கிலத்தில் இருக்கும் பின்பு Menu என்பதை தேர்வு செய்து பின்பு Option என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.
கிடைக்கும் சப்மெனுவில் language என்பதினை தேர்வு செய்தால் கிடைக்கும் இந்திய மொழிகளில் Tamil எனபதினை தேர்வு செய்ய வேண்டும் இவ்வாறு செய்த உடனே அனைத்து மெனுக்களும் தமிழில் தெரிய ஆரம்பிக்கும் . மொபைலில் தமிழ்தளங்களை வாசிக்க BOLT Indic ஒரு மிகச்சிறப்பான பிரௌசர் ஆகும் .