5. Warm Bodies
வார்ம் பாடீஸ் ஐந்து வாரங்கள் முடிந்த பின்னும் டாப் 5ல் இடம் பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 8.87 மில்லியன் டாலர்கள். இதுவரை 50.2 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்துள்ளது.
4. Escape from Planet Earth
சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 15.9 மில்லியன் டாலர்களை
வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
3. Safe Haven
இதுவும் சென்ற வாரம் வெளியான படம்தான். வெள்ளி, சனி, ஞாயிறில் 21.4 மில்லியன் டாலர்களை வசூலித்த இப்படம் ப்ரீமியர் ஷோவின் மூலம் 8.9 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. மொத்தம் 30.3 மில்லியன் டாலர்கள்.
2. Identity Thief
முந்தைய வாரம் முதலிடத்தில் இருந்த படம் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் வார இறுதி வசூல் 23.7 மில்லியன் டாலர்கள். இரண்டு வாரங்கள் முடிவில் 70.7 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்துள்ளது.
1. A Good Day to Die Hard
புரூஸ் வில்லிஸின் இந்த ஐந்தாவது பாகம் அதன் விளம்பரத்துடன் ஒப்பிடுகையில் சாதாரண ஓபனிங்கையே பெற்றுள்ளது. வார இறுதியில் 25 மில்லியனை வசூலித்த இப்படம் ப்ரீமியர் ஷோவையும் சேர்த்து 33.2 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.