விஜய் தலைவா படத்துக்குப் பிறகு நேசன் இயக்கும் ஜில்லா படத்தில் நடிக்கிறார். ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க மோகன்லால் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். தலைவாவுக்குப் பிறகுதான் இந்தப் படம் தொடங்கப்பட உள்ளது. அதற்கு முன்பே படத்தின் விநியோக உரிமைக்கு பெரிய போட்டியே நடக்கிறது.
முக்கியமாக துப்பாக்கியை விநியோகித்த ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் ஜில்லா எங்களுக்குதான் என்று ஒற்றைக் காலில் நிற்கிறது.
துப்பாக்கியில் விஜய், காஜல் அகர்வாலின் காதல் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட்டானதால் அவரையே படத்தின் நாயகியாக்கியிருக்கிறார்கள். படத்துக்கு இசை டி.இமான். இந்தியில் பிஸியான கேமராமேன் நட்டு என்கிற நட்ராஜ; ஜில்லாவுக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
போட்டோசெஷன், பூஜை, தொடக்கவிழா என விரைவில் ஜில்லா தடதடக்கப் போகிறது.