குருவை குரு பார்க்க கோடி நன்மை - குரு பெயர்ச்சி

நவக்கிரகங்களில் பூர்ண சுபகிரகமான குரு, இன்று இரவு 9.03க்கு ரிஷபராசியிலிருந்து மிதுனத்திற்குப் பெயர்ச்சியாகிறார். ஓராண்டு காலம் ஒரு ராசியில் தங்கும் இவர், 2014 ஜுன்12 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கிறார். "குரு பார்க்க கோடி நன்மை' என்பது ஜோதிட பழமொழி. குருவின் பார்வையால் தான் ஒரு மனிதன் வாழ்வில் திருமணம், குழந்தைப்பேறு, பணவரவு, கல்வியறிவு, சமூக கவுரவம் போன்றவை சிறப்பாக அமையும். குரு இருக்கும் இடத்தை விட, அவரது
பார்வைக்கு பலம் அதிகம். அவரின் 5,7,9 பார்வைகள் முறையே துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளில் பதிகிறது. இதன் மூலம் இந்த மூன்று ராசியினருக்கும் சனியின் கெடுபலன் குறைந்து நன்மை அதிகரிக்கும். 

குரு பெயர்ச்சியால் ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ஐந்து ராசியினருக்கு நன்மையும், மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மரகம், மீனம் ஆகிய ஏழு ராசியினருக்கு சுமாரான பலனும் நடக்கும். இந்த ஏழுராசியினரும் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். இவர் கள் நவக்கிரக மண்டபத்தில் உள்ள குருவுக்கு வெண்முல்லை மாலையும், மஞ்சள் வஸ்திரமும் சாத்தி வழிபடுவது அவசியம். 

வியாழனன்று விரதமிருந்து, அன்று மாலையில் தட்சிணாமூர்த்திக்கு கடலைப்பொடி அன்னம் நைவேத்யம் செய்து தானம் செய்யலாம். குருவின் அதிதேவதையான பிரம்மாவை வழிபடுவதும், குருவுக்குரிய புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திர நாட்களில் ஆலய தரிசனம் செய்வது நன்மைக்கு வழிவகுக்கும். சிவன் கோயிலில், தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, வில்வம், கொண்டைக்கடலை மாலை அணிவித்து வணங்குவது நல்லது. நெய்தீபம் ஏற்றுவதும் சிறப்பு. 

வியாழக்கிழமைகளில், ""குரு பிரம்மா குரு விஷ்ணுகுரு தேவோ மகேஸ்வரஹ குரு சாக்ஷõத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ'' என்னும் ஸ்லோகத்தை 12 முறை சொல்லி வணங்கினால், குருவால் ஏற்படும் சிரமங்கள் குறையும். மிதுன ராசியில் சஞ்சரிக்கும் ஓராண்டுக்குள் குரு தலங்களான திருச்செந்தூர், ஆலங்குடி (திருவாரூர்), பட்டமங்கலம் (சிவகங்கை) தென்குடித்திட்டை (தஞ்சாவூர்), குருவித்துறை (மதுரை), ஆகிய ஊர்களிலுள்ள கோயில்களுக்கு சென்று தரிசித்தால் கெடுபலன் நீங்கி நன்மை அதிகரிக்கும். 


பலன் படிக்க அந்தந்த ராசியின் மீது க்ளிக் செய்யுங்கள் !











பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget