எளிதாக ஜோதிடம் கற்பது எப்படி - பாகம் 13

இந்தப் பதிவில் கிரகங்களுக்கும், நட்சத்திரங்க்ளுக்கும் உள்ள தொடர்பைக் காணலாம். எப்படி ஒவொவொரு ராசியையும் கிரகங்கள் ஆட்சி செய்கின்றனவோ, அதுபோல நட்சத்திரங்களையும் கிரகங்கள் ஆட்சி செய்கின்றன. என்னவொரு வித்தியாசம் ராசிகளை ஆட்சி செய்பவர்களின் பட்டியலில் இராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் இல்லை.
ஏழு முக்கிய கிரகங்களை மட்டுமே ராசிகளின் ஆட்சியாளர்களாக பல கிரந்தங்களில் ஜோதிட மேதைகள் பட்டியலிட்டு உள்ளனர்.

ஆனால் இராகு, கேது ஜாதகத்தில் எந்த ராசியில் நிற்கிறார்களோ அந்த ராசியை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதில் கில்லாடிகள். உதாரணத்திற்கு, ஒருவருடைய ஜாதகத்தில் கேது விருச்சிகத்தில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். கடந்த பதிவில் உள்ள அட்டவணைப்படி விருச்சிகத்தின் சொந்தக்காரர் செவ்வாய். ஆனால் விருச்சிகத்தில் இருக்கும் கேது, செவ்வாய் தர வேண்டிய பலனை அவர் சார்பாக கேதுவே ஜாதகருக்கு தருவார். அரசியல்வாதிகள் அடுத்தவர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதைப் போலத்தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!

ஆனால் நட்சத்திரங்களை பகிரும்போது இராகு, கேதுவையும் விளையாட்டில் சேர்த்துக் கொண்டார்கள். பின்வரும் அட்டவணையில் நட்சத்திரங்களை ஆளும் கிரகங்ளின் விவரங்களை தந்துள்ளோம்.


நட்சத்திரங்கள்
ஆளும் கிரகம்
அசுவினி
மகம்
மூலம்
கேது
பரணி
பூரம்
பூராடம்
சுக்கிரன்
கார்த்திகை
உத்திரம்
உத்திராடம்
சூரியன்
ரோகிணி
அஸ்தம்
திருவோணம்
சந்திரன்
மிருகசீரிடம்
சித்திரை
அவிட்டம்
செவ்வாய்
திருவாதிரை
சுவாதி
சதயம்
இராகு
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
குரு
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
சனி
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
புதன்

9 கிரகங்களுக்கும் 27 நட்சத்திரங்களை, ஆளுக்கு 3 நட்சத்திரங்களாக சமமாக பங்கிட்டு சண்டை போடாமல் சமர்த்தாக இருக்கச் சொன்னார்கள். ஆனால் அவர்களுக்குள்ளேயும் ஈகோ பிரச்சினையும், சண்டையும் இருக்கத்தானே செய்கிறது. அதனை எதிர்காலத்தில் வரும் பதிவுகளில் விவரமாகக் காண்போம்.

நட்சத்திராதிபதி என்னப்பா செய்வார்?

இது மிக முக்கியமான கேள்வி என்பதால், இதற்கென ஒரு தனி பதிவை, விளக்கமாக தரலாம் என உள்ளேன். அடுத்து வரும் பதிவுகளில் எதிர்பார்க்கலாம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget