மங்கையரின் பல்வேறு அவதாரங்கள்

விஞ்ஞானரீதியாகவும், சமூக ரீதியாகவும் பெண்ணுக்கும் ஆணுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக சொல்வது போல் பெண்ணால் வலியை அதிகமாக தாங்க முடியும். பெண்ணுக்கும் ஆண்களுக்கும் மாற்றங்கள் உண்டு. ஆனால் பருவ காலத்தில் பெண்ணுக்குத்தான் முதலாவதாக மாற்றங்கள் ஏற்படும். 

முதலாவது மாற்றத்தில் பெண் தாய்மையை அடைவதற்கான மாற்றம் சிறுவயதானாலும் இந்த முக்கியமான சமூக பொறுப்பை ஏற்றுக்கொள்கிறாள். அதற்காக தயார் ஆகிறாள்.. தன் உடலில் புது உணர்வுகள். அதில் பல வலியைத் தருவதாகும். உடல் பலவீனத்தையும் தாங்குகின்றாள். 

அதை எதிர்கொள்வதற்கு அடிப்படை வசதிகளும் இல்லாத பெண்களும் உண்டு. அச்சந்தர்ப்பத்தில் சங்கடங்களையும் தாங்குகின்றாள். இதையும் தாண்டி சமூக சமய சார்ந்த சில சடங்குகளையும் எதிர்கொள்கிறாள். இச்சடங்குகளில் சிலருக்கு உடல் நிலை பாதிப்பும் ஏற்படுகின்றது. 

ஆனாலும் இவையெல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு வாழ்க்கையை கொண்டு செல்கிறாள். இரண்டாவது மாற்றம் தாய்மையை முழுமையாக அடைவது. இதில் தனக்குள் ஒரு உயிர் இருப்பதை உணர்வாள். அவளுக்குள்ளே அதை தாங்கிக்கொள்வாள். 

அதிலும் வலிகள், பொறுப்புணர்வு, அவளைக்கொல்லும். ஆனாலும் மீண்டும் உயிர்பிறப்பாள். சமூகத்திற்கும் வாழ்க்கைச் சக்கரத்திற்கும் முக்கிய பங்கை கொடுக்கிறாள். மூன்றாவது மாற்றம் பருவத்தையும் தாண்டி தாய்மையையும் தாண்டி முதுமைக்காலத்தில் தனக்குள் இருந்த சில உடல் பாகங்கள் செயல் இழப்பதை உணர்கிறாள். 

மறுபடியும் வலிகள் தன் வாழ்க்கைக்கு சில மாற்றங்களையும் அர்த்தங்களையும் கொடுத்த பாகங்கள் செயலிழப்பது கோமா நிலையில் இருக்குமொரு நோயாளியின் உணர்வு போல்தான். நாலாவது மாற்றம் கோமா நிலையினையும் வென்று மறுபடியும் உயிர்பெறும் நோயாளி போலவே செயல்லற்றுப்போன பாகங்களை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை இன்னொரு கண்ணோட்டத்தில் புதுமையாக வாழப் பழகுகின்றாள். 

இவ்வளவும் ஒருபெண்ணுக்கு சாதாரணமாகவே இருக்க கூடிய மாற்றங்கள். இது விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட விஷயங்கள். இவை உங்களுக்கு பொது விஷயமாக தெரிந்தாலும் தற்கால சமூகத்திற்கு நினைவுபடுத்த வேண்டியவையாகும். 

இத்தோடு சமூகமும் கலாச்சாரமும் பெண்ணுக்கு மாற்றங்களை ஏற்படுத்திக்கொடுக்கும். அதையும் ஏற்றுக்கொள்கிறாள். இவை எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு சாதனை படைக்கும் பெண்கள் பலர். இவர்களைப்பற்றி பத்திரிகைகள், இணையத்தில், புத்தங்களிலும் வாசித்து அறிந்துகொள்ளலாம். பெண்களே இன்னும் பல மாற்றங்களை எதிர்கொள்வோம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget