ரீட் ஒன்லி கோப்புகளை எடிட் செய்வது எப்படி?

வேர்ட் புரோகிராமில், கவனிக்க வேண்டிய அம்சமாக, ரீட் ஒன்லி (Read Only) கோப்புகள் உள்ளன. ஒரு டாகுமெண்ட் பைலை, ரீட் ஒன்லியாக பார்மட் செய்திடப் பல வழிகள் உள்ளன. நாம் அறியாமல் இவ்வாறு அமைக்கப்படும் வழியினை மாற்றவும், வேர்ட் சில வசதிகளைத் தருகிறது. இங்கு அவற்றைப் பார்க்கலாம்.

ரீட் ஒன்லி என அடையாளம் இடப்பட்ட பைல்களை, நாம் படிக்க மட்டுமே முடியும். அவற்றை திருத்தி அப்டேட் செய்திட முடியாது. இது சில வேளைகளில் நாமாகவே அமைத்து, நம் பைல்களைப் பிறரிடமிருந்து காப்பாற்றி வைத்துக் கொள்ளலாம் என்றாலும், தானாக பைல்கள் இவ்வாறு அமைகையில், நமக்கு சிரமத்தைத் தருகின்றன.

முதலில் நம் கட்டுப்பாட்டில் உள்ள ரீட் ஒன்லி பைல்களைப் பார்க்கலாம். வேறு ஒருவர் நம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் செயல்படுகையில், குறிப்பிட்ட ஒரு கோப்பினை Read Only என மாற்றி இருக்கலாம். இதனை நீக்க, வேர்ட் டாகுமெண்ட்டைத் திறந்து, Tools ஆப்ஷன்ஸ் சென்று கிடைக்கும் விண்டோவில், Security என்ற டேப்பினைக் கிளிக் செய்திடவும். பின் இங்கு நடுவில் உள்ள Read Only Recommended என்று உள்ள வரிக்கு முன்னர் தரப்பட்டுள்ள சிறிய கட்டத்தில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

இன்னொரு வகையிலும் இந்த ரீட் ஒன்லி தடையை நாம் சந்திக்கலாம். நெட்வொர்க் ஒன்றில், பல கம்ப்யூட்டர்கள் இணைந்து அதன் சர்வரில் உள்ள வேர்ட் புரோகிராமினைப் பயன்படுத்தி, டாகுமெண்ட்களை உருவாக்கி வருவோம். இதில் முதலில் ஒருவர் ஒரு டாகுமெண்ட்டைத் திறந்து பயன்படுத்தினால், அடுத்து அதே டாகுமெண்ட்டைப் பயன்படுத்துபவர்களுக்கு, அந்த பைல், ரீட் ஒன்லியாகத்தான் கிடைக்கும். இப்போது அந்த பைலின் தன்மையை மேலே சொன்னபடி மாற்ற முய்டியாது. வேறு வழியும் இல்லை. முதலாவதாகத் திறந்தவர் அதனை எடிட் செய்து மீண்டும் சேவ் செய்திடும் வரை காத்திருக்க வேண்டியதுதான். 

இன்னொரு வகையிலும் இந்த பிரச்னையைச் சந்திக்கலாம். டாகுமெண்ட்டை சேவ் செய்திடும் போல்டர், ரீட் ஒன்லி தன்மையுடன் அமைக்கப்பட்டிருக்கலாம். இது அமைந்துள்ள டைரக்டரியைத் திறந்து அதன் தன்மைகளைப் (Attributes) பார்த்தால் இது தெரியவரும். ரீட் ஒன்லி தன்மையை நீக்கினால் பிரச்னை தீரும். இந்த வகையில் தீர்வினை அமைக்கையில், அந்த டைரக்டரியின் ரூட் டைரக்டரி வரை சென்று, இந்த தன்மை உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட பைல் மட்டும் இந்த தன்மையைக் கொண்டிருந்தால், அந்த டாகுமெண்ட் பைலைத் திறந்து, அதன் முழு டெக்ஸ்ட்டை கண்ட்ரோல் + ஏ கொடுத்து காப்பி செய்திட வேண்டும். பின்னர், அதனை இன்னொரு புதிய காலி பைல் (A new blanket document file) ஒன்றைத் திறந்து, அதில் பேஸ்ட் செய்து, புதிய பெயர் கொடுத்து சேவ் செய்திடலாம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget