உடல் எடையை குறைக்க உதவும் உடற்பயிற்சி

எதற்கும் நிகரில்லாத உடற்பயிற்சி நீச்சல். நுரையீரலை வலுவடையச் செய்யும். ஒரு மணி நேர நீச்சல் பயிற்சியினால் உடம்பிலிருந்து 800 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது.மேலும் உடல் மென்மையாகி மெருகு பெறுவதோடு உழைக்கும் திறனும் அதிகரிக்கிறது.
  வாரத்திற்கு குறைந்தது 6 தடவையாவது நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு வேளையும் குறைந்தது 30 அல்லது 40 நிமிடம் வரை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தினமும் 30 நிமிட நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நீச்ச‌ல் ப‌யிற்சி ஒவ்வொருவ‌ருக்கும் மிகவும் அவ‌சிய‌ம். 

நீச்சல் பயிற்சியாலும் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன. நீச்சல், முதியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் ஏற்ற உடற்பயிற்சியாகும். உடல் ஊனமுற்றவர்களுக்குக்கூட இது மிகச்சிறந்த உடற்பயிற்சி. உடலை வலுவாக்கவும், கிடைத்த வலுவைப் பாதுகாத்துக்கொள்ளவும் உதவுகிறது. 

நீச்சல் பயிற்சி, உடலில் உள்ள பலவகையான உள் உறுப்புகளுக்கும் நரம்பு அமைப்புகளுக்கும் வலுவை அளிக்கிறது. குறைந்த காலத்தில் உடலில் உள்ள பலவகையான தசைகளுக்கு நல்ல வலுவை அளிக்கிறது. உடலின் தேவையற்ற, அதிகமான எடையைக் குறைக்க துணை புரிகிறது. 

நீச்சல் பயிற்சியின்போது நீர் உடலுக்கு இயற்கையின் தடுப்பாற்றலை அளிக்கிறது. தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் தொடர்ந்து நீச்சல் பயிற்சி மேற்கொள்வதால் தேவையற்ற கலோரிகளை எரிக்க முடியும். நீச்சலானது உள்ளத்துக்கு எளிதில் உணர்ச்சிவசப்படாத மனப்பக்குவத்தையும், எந்தச் செயலையும் நிதானத்துடன் செய்யும் மனப்பக்குவத்தையும் அளிக்கிறது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget