ஒயிட் ஹவுஸ் டவுன் ஹாலிவுட் சினிமா விமர்சனம்

வெள்ளை மாளிகை தாக்குதல் கதைகள், அமெரிக்கர்களுக்கு அலுக்காது போல! அதில் இன்னுமொரு அத்தியாயம் இந்தப்படம். இம்முறை, தீவிரவாதிகள் முற்றுகை. வேடிக்கை பார்க்க வந்த நாயகனும், அவனது மகளும் மாட்டிக்கொள்ள... அமெரிக்க ஜனாதிபதியையும், தன் மகளையும் ஒருசேரக் காப்பாற்றும் நாயகனின் அசாத்திய ஹீரோயிசம்.
பதினோரு வயது மகள் எமிலி (‌‌ஜோயி கிங்), தந்தை ஜான் கேலுடன் (சேனிங் டாட்டம்) பேசுவதில்லை. அவளுக்கு எப்போதும் அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் சாயர் (ஜேமி ஃபாக்ஸ்) மீதுதான் கிரேஸ். அவளது ஆசைக்காக, வெள்ளை மாளிகை சுற்றுப்பயணத்திற்கு, இலவச பாஸ் வாங்குகிறான் ஜான். 22 அரபு நாடுகளுடன், ஜனாதிபதி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் அதே நாளில், ஜானும் எமிலியும் உள்ளே வருகிறார்கள். அன்று... வெள்ளை மாளிகை, தீவிரவாதிகளின் வசமாகிறது. வெள்ளை மாளிகையின் ரகசிய ஏஜென்டாக ஆகும் கனவுடன் இருக்கும் ஜானுக்கு, இரண்டு பணிகள் காத்திருக்கின்றன. ஒன்று.. அமெரிக்க ஜனாதிபதியை காப்பாற்றுவது! மற்றொன்று... பிணைக்கைதியாக இருக்கும் தன் மகளை மீட்பது! ஜான் ஒற்றை ஆளாக அதை எப்படி சாதிக்கிறான்? என்பது கதை.

திரைக்கதை அமைத்த ஜேம்ஸ் வாண்டர்பில்ட்டை பாராட்ட வேண்டும். எத்தனை அடுக்கு பாதுகாப்பு இருந்தாலும், அமெரிக்க ஜனாதிபதி பாதுகாப்பற்றவர்தான் என்பதை காட்டும் அமெரிக்க தைரியம் சூப்பர்! அகிம்சையின் நாயகனான ஜனாதிபதி, அப்பாவி மக்களைக் காப்பாற்ற, துப்பாக்கியை எடுக்கும்போது, அரங்கம் அதிர்கிறது.

150 மில்லியன் டாலர் செலவு செய்திருக்கிறார்கள். அந்த பிரம்மாண்டத்தை, படம் முழுக்க தெளித்திருக்கும் இயக்குனர் ரோலண்ட் எமிரிச், ரசிகனின் கைத்தட்டல் பரிசைப் பெறுகிறார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget