தமிழில் கே.பாக்யராஜ் கதாநாயகனாக நடித்த புதிய வார்ப்புகள் படத்தில் நடித்தவர் ரதி. அதன்பிறகு ரஜினியுடன் முரட்டுக்காளை உள்பட சில படங்களில் நடித்தவருக்கு பின்னர், தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தாய்மொழியான இந்திக்கு சென்று சிலகாலம் நடித்த ரதி, பின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இதற்கிடையே தமிழில் பிரசாந்த் நடித்த மஜ்னு படத்தில் கதாநாயகியின் அம்மாவாக நடித்திருந்தார் ரதி.
அதையடுத்து, பல ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அவர் தற்போது இந்தியில் ஜோ ராஜன் என்பவர் இயக்கும் இந்தி படத்தில் அம்மா வேடத்தில் நடிக்கிறாராம். இப்படத்தில் ரதியின் மகன் தனுஜ் கதாநாயகனாக அறிமுகமாகிறாராம். இதையடுத்து மீண்டும் இந்திய சினிமாக்களில் முழுநேர நடிகையாக திட்டமிட்டுள்ள ரதி, விரைவில் தமிழ்ப்படங்களில் நடிப்பதற்காகவும் சில அபிமான இயக்குனர்களை சந்தித்து மறுபிரவேசம் குறித்து தெரியப்படுத்தி வருகிறாராம்.