ஆடவரை மயக்க வரும் ஹீரோ இக்னைட்டர் 125 சூப்பர் பைக்

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரும், அனைத்து மக்களாலும் விரும்பப்படும் நிறுவனமுமான ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனத்தின் புதிய அறிமுகம்தான் கம்பீரமான இக்னைட்டர் 125. புதுமையான தொழில்நுட்ப அம்சங்கள், சிறந்த செயல்திறன், நிறைந்த மைலேஜ் இவற்றுடன் நியாயமான விலையில் இக்னைட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பக்கவாட்டில் பார்க்கும்போது சற்றே முரட்டுத்தனமான
தோற்றத்தையும் இது கொடுக்கிறது. இதன் அமைப்பு சற்றே வித்தியாசமாகவும் உள்ளது.

ஹோண்டா ஸ்டன்னர் போன்ற தோற்றத்தை இக்னைட்டர் கொடுத்தாலும் இதில் செய்யப்பட்டுள்ள சில பொறியியல் தொழில்நுட்ப மாற்றங்கள் இதன் தோற்றத்தை மிகவும் ஸ்டைலாகவும் அதிக கம்பீரமாகவும் மாற்றியுள்ளது. புதிய முன்புற கவுல் அதில் நடுவில் உள்ள ட்ரப்பிஜாய்ட் வடிவ ஹெட்லைட், வித்தியாசமாகவும் அழகாகவும் உள்ள ஃப்யூவல் டேங்க், இரட்டை வண்ணங்களில் உள்ள ரியர் வ்யூ மிர்ரர், இரண்டாய் பிரிக்கப்பட்டுள்ள சீட், அழகான டெயில் லேம்ப் போன்றவைகளும், பெரும்பாலான பகுதி கருப்பு நிறத்தில் உள்ளதால் வண்டியின் நிறம் எடுப்பாக இருப்பதுடன் கம்பீரமாகவும் தோற்றமளிக்கிறது. இதன் கன்சோல் அனலாக் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்டல் கொண்டதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.



இதன் சூப்பர் ஃபாஸ்ட் ATFT என்ஜின் ஏர் கூல்ட், 4 ஸ்ட்ரோக், 125சிசி OHC என்ஜினாகும். இது அதிகபட்சமாக 11 bhp பவரை 8000 ஆர்பிஎம்மில்லும் 11 NM டார்க்கை 5000 ஆர்பிஎம்மில் வழங்கக்கூடியதாகவும் உள்ளது. இதன் ஆக்சிலரேஷன் மிகச்சிறப்பாக 0-60 கிலோமீட்டர் வேகத்தை ஏழு நொடிக்கும் குறைவான நேரத்தில் எட்டுகிறது. இக்னைட்டரின் அதிகபட்ச வேகம் 100 கிலோமீட்டர் மணிக்கு ஆகும். இதன் சக்தி வாய்ந்த என்ஜினின் செயல்திறனாய் லிட்டருக்கு 55 கிலோமீட்டர் மைலேஜ் கொடுப்பதாக கூறப்படுகிறது. 9 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க்கை நிரப்பிவிட்டால் கிட்டத்தட்ட 500 கிலோமீட்டர் வரை நிம்மதியாக இருக்கலாம் என்பது இதன் சிறப்பு அம்சம்.



இதன் அகலமான ஹாண்டில்பார் ஓட்டுபவருக்கு வசதியாக இருக்கும்படி உள்ளது. உள்ளங்கைக்கு இதனால் ஹேண்டில் க்ரிப் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. தனியாக சீட் பின்புறம் அமர்பவருக்கு கொடுக்கப்பட்டுள்ளதும் அதன் அமைப்பும் சிறப்பாக இருக்கிறது. பைக் சீட்டின் அடியில் பொருட்கள் வைத்துக் கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.



இக்னைட்டரின் பராமரிப்பு தேவைப்படாத பாட்டரியும், ட்யூப்லெஸ் டயரும் ஓட்டுபவரை தேவையற்ற திடீர் பிரச்சனைக்குள் ஆழ்த்தாமல் அமைதியாக இருக்க உதவுகிறது. முன்புற டிஸ்க் ப்ரேக்கும், இதன் சிறப்பான சஸ்பென்ஷனும் ஸ்திரமான பயணத்திற்கு வழிவகுக்கிறது.



இதன் என்ஜின் 5 ஸ்பீட் மானுவல் ட்ரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸுடன், ஒரு கியர் டவுன் ஷிஃப்ட்டிலும் மீதி நான்கு கியர்கள் அப் ஷிஃப்ட்டிலும் இயங்குகிறது. இதன் கியர் வெட் மல்டி ப்ளேட் க்ளட்ச் உடன் சேர்ந்து சிறப்பாக இயங்குகிறது.



முன்புறம் டெலஸ்கோப்பிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சர்பருடனும் பின்புறம் ஸ்விங் ஆர்ம் 3 ஸ்டெப் அட்ஜஸ்டபிள் ஹைட்ராலிக் ஷாக் அப்சர்பருடனும் வருவதால் மேடு பள்ளங்கள் நிறைந்த சாலைகளின் பயணமானாலும் ஓட்டுவதற்கு கஷ்டமாக இருப்பதில்லை எனலாம்.

இக்னைட்டரை கையாள்வதும் மிகச் சுலபமாகவே உள்ளது. இதன் குறைவான எடை கையாளச் சுலபமாக இருப்பதுடன் நல்ல மைலேஜிற்கும் உதவுகிறது. அகலமான ஹேண்டில்பாரும், அகலமான பின்புற டயரும் குறுகிய திருப்பங்களிலும் சாலையின் ஸ்திரத்தன்மையை இழப்பதில்லை. இதன் டிஸ்க் ப்ரேக் வேரியன்ட்டில் முன்புறம் டிஸ்க் ப்ரேக் இருப்பதால் அதிகபட்ச வேகத்திலும் கட்டுப்படுத்த சுலபமாகவே உள்ளது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget