சிங்கம் 2 உலுக்கும் கர்ஜனை

நடிகர் : சூர்யா, விவேக், சந்தானம், ராதாரவி, ரகுமான்
நடிகை : அனுஷ்கா, ஹன்சிகா மோட்வானி, மனோரமா
இயக்குனர் : ஹரி
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
ஓளிப்பதிவு : கதிர்

தூத்துக்குடி துறைமுகத்தில் ஆயுதக் கடத்தல் நடைபெறுகிறது என்ற ரகசிய தகவல் வருகிறது. இதனை ரகசியமாக கண்காணிப்பதற்காக போலீஸ் அதிகாரியான சூர்யாவை மாநில உள்துறை அமைச்சர் விஜயகுமார் அனுப்பி வைக்கிறார். தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் என்.சி.சி. ஆசிரியராக பணிபுரிந்து கொண்டே சூர்யா ரகசியமாக கண்காணித்து வருகிறார்.

இந்நிலையில் அதே பள்ளியில் படிக்கும் ஹன்சிகா மோத்வானி, பள்ளியில் வினாத்தாள் திருடி சூர்யாவி்டம் மாட்டிக்கொள்கிறார். இதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தாமல் சூர்யாக மறைத்து விடுகிறார். இதனால் சூர்யா மீது காதல் வயப்படுகிறார் ஹன்சிகா.

ஆனால் இந்தக்காதலை விளையாட்டுத் தனமானது என சூர்யா அவருக்கு புரிய வைக்கிறார்.

இதற்கிடையே தூத்துக்குடி துறைமுகத்தில் போதைப்பொருள் கடத்தப்படுகிறது என்பதை கண்டுபிடிக்கும் சூர்யா, இதற்கு காரணம் ரகுமான் மற்றும் இண்டர்நேசனல் கிரிமினல் டேனி என்பதையும் அறிகிறார்.

ஒரு கட்டத்தில் தூத்துக்குடியில் ஜாதி பிரச்சினையால் கலவரம் ஏற்படுகிறது. அப்போதுதான் சூர்யா போலீஸ் அதிகாரி என்பது தெரிகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த துணை கமிஷனராக பொறுப்பேற்கிறார்.

இதுஒருபுறம் இருக்க சூர்யாவின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய அவரது தந்தை அனுஷ்காவை திருமணம் செய்து வைக்கவும் சம்மதிக்கிறார்.

இந்நிலையில் போதைக் கடத்தல் செய்துவரும் பாய், ரகுமான் மற்றும் டேனி ஆகியோரை கைது செய்ய முழு மூச்சாக செயல்படுகிறார் சூர்யா.

இதில் அவர் வெற்றி பெற்றாரா? ஹன்சிகா மோத்வானியின் காதல் என்ன ஆனது? அனுஷ்காவை திருமணம் செய்தாரா? என்பது மீதிக்கதை.

சூர்யா காக்கி உடையில் மிடுக்காய் வலம் வருகிறார். இவர் பேசும் வசனங்கள் திரையில் பளிச்சிடுகிறது. குறிப்பாக எதிரிகளின் முன்னின்று அவர்களுக்கு சவால் விடும்போது தீப்பொறி கிளம்பும் வசனங்கள். சண்டைக்காட்சியில் திரையே அதிர்கிறது.

ஹன்சிகா மோத்வானி பள்ளி சீருடையிலும் பளிச்சினு இருக்கிறார். இவரின் கதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார்.

படத்தில் சுடிதாருடன் காட்சி அளிக்கும் அனுஷ்கா, பாடல் காட்சிகளில் தாராளமாக கவர்ச்சி காட்டி ரகிகர்களை கிறங்கடித்திருக்கிறார்.

விவேக், சந்தானம், நாசர், மன்சூர்அலிகான், ராதாரவி, ரகுமான், டேனி, மனோரமா ஆகியோர் அவர்களது கதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார்கள்.

தேவி ஸ்ரீபிரசாத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

சூர்யாவை படம் முழுக்க டென்ஷனாகவே காட்டியிருக்கிறார் இயக்குனர் ஹரி. சூர்யாவின் புன்சிரிப்பு படத்தில் மிகவும் குறைவு. கமர்ஷியல் படங்களைத் தரும் ஹரி, சிங்கம் 2-ல் தனது பாணியை விட்டு சற்று விலகி இருப்பது படத்திற்கு சற்று பின்னடைவு.

சிங்கம் 2 கமர்ஷியல் வலு குறைவு
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget