சிவா, தளபதி படங்களில் ரஜினியின் ஜோடியாகி ரசிகர்களைக் கவர்ந்தவர், நடிகை ஷோபனா. தேசிய விருதுபெற்ற நடிகை. பின்னாளில் பரத நாட்டியமே போதும் என சினிமாவிலிருந்து ஒதுங்கிக் கொண்டார்.
இப்போது மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் ஷோபனா, கோச்சடையானில்.
இந்தப் படத்தில் ஏற்கெனவே பல முக்கிய நட்சத்திரங்கள் ஒப்பந்தமாகியுள்ளனர். பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்த நிலையில் உள்ள கத்ரீனா கைஃப் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்.
தமிழ் நடிகை சினேகா ரஜினியின் தங்கையாக வருகிறார். ஆதியும், ப்ருத்விராஜும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மோகன்பாபுவின் மகளும், நடிகை-மற்றும் தயாரிப்பாளருமான லட்சுமி மஞ்சு ஒரு முக்கிய வேடம் ஏற்றுள்ளார்.
இந்த நட்சத்திரங்களுடன் புதிதாக இணைந்திருப்பவர் ஷோபனா.
படத்துக்கு ஏற்கெனவே ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க ஆரம்பித்துவிட்டார். கே எஸ் ரவிக்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குநர் மேற்பார்வை செய்ய, சௌந்தர்யா இயக்கும் படம் இது!