விஞ்ஞானிகள் செயற்கை விந்தணுவை கண்டுபிடித்தனர்

உலகிலேயே முதன் முறையாக செயற்கை ஆணுருப்பு மூலம் விந்தணு உற்பத்தி செய்துள்ளனர் கலிபோர்னியா விஞ்ஞானிகள். இது மலட்டுத்தன்மையினால் சந்ததியை உருவாக்க முடியாமல் இருந்த ஆண்களுக்கு வரப்பிரசாதம் என்று மருத்துவ உலகம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் கியோபோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜப்பான் கருத்தரிப்பு மைய
நிபுணர்கள் எலியின் கருவில் உள்ள ஸ்டெம்செல்களில் இருந்து தரம் வாய்ந்த திசு செல்களை ஆய்வகத்தில் வைத்து தயாரித்தனர். அவற்றை மலட்டுதன்மையுடன் இருந்த ஒரு எலியின் விரை பைக்குள் செலுத்தினர். அது இயற்கையானதை போன்று செயற்கையான விந்தணுவை உற்பத்தி செய்தது. அவற்றை எலியின் கரு முட்டையில் செலுத்தினர். இதை தொடர்ந்து உடல் நலத்துடன் கூடிய எலிக்குட்டிகள் பிறந்தன. எனவே இதே முறையை மலட்டுத்தன்மை நோயில் சிக்கி தவிக்கும் ஆண்களின் உடலில் பயன்படுத்தவும் நிபுணர்கள் முடிவு செய்தனர்.

இதனையடுத்து கலிபோர்னியாவை விஞ்ஞானிகள் செயற்கை விந்தணு உற்பத்தி செய்யும் உயிரியல் இயந்திரம் ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். இந்த செயற்கை ஆண் உறுப்பில் விந்தணுக்களை செலுத்தியதில் அவை எண்ணற்ற விந்தணுக்களை உற்பத்தி செய்தன. இந்த செயற்கை விந்தணு உற்பத்தி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த புதிய முயற்சி மலட்டுத் தன்மையால் மருகிப்போயிருந்த ஆண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget