தித்திப்பான அவல் பாயாசம்


தேவையான பொருள்கள்: 


அவல் - 250 கிராம் 
சர்க்கரை - 200 கிராம் 
பால் - அரை லிட்டர் 
முந்திரி - 10 கிராம் 
ஏலக்காய் - 4 

காய்ந்த திராட்சை - 10 கிராம் 
நெய் - 50 கிராம் 


செய்முறை: 



  • பாலை காய்ச்சி வைத்து‌க் கொள்ள வேண்டும். 


  • ஏலக்காய் சர்க்கரை சிறிது சேர்த்து மிக்ஸியில் அரைத்து தூள் செய்து வைத்து கொள்ளவும். 


  • நெய் விட்டு லேசாக சூடானதும் முந்திரியை பொ‌ன்‌னிறமாக வறுத்து எடுத்து‌க் கொள்ள வேண்டும். 


  • அதிலேயே அவலை லேசாக வறுத்து கொள்ள வேண்டும். 


  • பிறகு 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். 


  • அவ‌ல் ஊ‌றியது‌ம், வா‌ய் அக‌ண்ட பா‌த்‌திர‌த்‌தி‌ல் அவலை போ‌ட்டு வேக வை‌க்கவு‌ம்.


  • அவ‌ல் வெந்த பிறகு சர்க்கரை, பால், ஏலக்காய் தூள் அனைத்தும் போட்டு நன்கு கிளறவும். முந்திரி, திராட்சையை சேர்க்கவும். 



சுவையான அவல் பாயசம் தயா‌‌ர்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget