கூகுள்+ வாடிக்கையாளர் எண்ணிக்கை 9 கோடியைத் தாண்டியது


உலகின் முன்னணி இணையதளச் சேவை நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் சோஷியல் நெட்வொர்க்கிங் சேவையான கூகுள்+ இன் பயனாளர் எண்ணிக்கை 9 கோடியைத் தாண்டியது.


சோஷியல் நெட்வொர்க்கிங் என்ற நட்பு வலைத்தளத்தின் மீதான வாசகர்களின் ஆர்வம் அதிகரித்துவருவதே இதற்குக் காரணம். கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி
இது பொதுமக்கள் பங்கேற்ப்புக்கு திறக்கபட்டது.


ஆனால் கூகுளின் போட்டி நிறுவனமான ஃபேஸ்புக் இதே 9 கோடி பயனாளர் எண்ணிக்கையை எட்ட 4 ஆண்டுகள் தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


2004ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஃபேஸ்புக் உலகம் முழுதும் இன்று 80 கோடி பயனாளர்களைக் கொண்டுள்ளது.


இது குறித்து கூகுள்+ இன் தலைமைச் செயலதிகாரி லாரி பேஜ் கூறுகையில், "நான் அதிகப்படியான மகிழ்ச்சியில் உள்ளேன், இன்று உலகம் முழுதும் 9 கோடி பயனாளர்கள் உள்ளனர். இது 3 மாதங்களுக்கு முன்பு நான் அறிவித்திருந்ததை விட இரு மடங்கு அதிகமாகும்" என்றார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget