தொழிற் நுட்பங்களுக்கு பஞ்சமில்லா புதிய டேப்லெட்!


இசட்டிஇ நிறுவனம் லைட் டேப்லெட்-2 என்ற பெயரில் புதிய டேப்லெட்டைக் களமிறக்குகிறது. இது ஒரு உயர்தர டேப்லெட் ஆகும். இதில் உள்ள முக்கிய அம்சங்கள் அனைத்தயும் பார்த்துப் பார்த்து சிடிஇ நிறுவனம் இந்த டேப்லெட்டில் இணைத்திருக்கிறது. அதுபோல் இந்த டேப்லெட்டின் டிசைனும் அட்டகாசமாக இருக்கும்.
இந்த சிடிஇ லைட் டேப்லெட் 2ன் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது 7 இன்ச் அளவுள்ள 600 x 1024 பிக்சல் ரிசலூசனுடன் கூடிய கெப்பாசிட்டிவ் தொடுதிரையைக் கொண்டிருக்கிறது. அதுபோல் 3.2 மெகா பிக்சல் கொண்ட முக்கிய கேமராவையும் அதே நேரத்தில் 0.3 மெகா பிக்சல் விஜிஎ முகப்புக் கேமராவையும் கொண்டுள்ளது. இந்த கேமராவில் வீடியோ எடுக்கவும் முடியும்.
இந்த இசட்டிஇ கேமராவின் சேமிப்பு வசதியைப் பார்த்தால் ஏராளமான கால் ரிக்கார்டுகளை கொண்டுள்ள போன்புக்கை கொண்டிருக்கிறது. அதுபோல் 4000 எம்பி அளவு இன்டர்னல் சேமிப்பு கொண்ட 1024 எம்பி ரேமைக் கொண்டிருக்கிறது. இதன் எக்ஸ்டர்னல் சேமிப்பை 32 ஜிபி வரை விரிவுபடுத்துக் கொள்ளலாம். அதற்காக மைக்ரோஎஸ்டி மற்றும் மைக்ரோஎஸ்டிஎச்சி ஸ்லாட் வசதியும் இந்த டேப்லெட்டில் உண்டு.
மேலும் இந்த சிடிஇ டேப்லெட்டில் ஜிபிஆர்எஸ் க்ளாஸ் 12, எட்ஜ், 3ஜி வசதிகளான எச்எஸ்டிபிஎ மற்றும் எச்எஸ்யுபிஎ போன்ற வசதிகளும் உள்ளன. மேலும் இணைப்பு வசதிகளுக்காக இந்த டேப்லெட்டில் டபுள்யுலேன், வைபை, ப்ளூடூத் 2.1, மினி யுஎஸ்பி மற்றும் ஜிபிஎஸ் வசதி போன்ற நிறைய வசதிகளை இந்த டேப்லெட் அள்ளித் தெளிக்கிறது. ஆனால் இதில் இன்ப்ரேர்டு போர்ட் இல்லை.
நெட்வொர்க் வசதிகளைப் பார்க்கும் போது இந்த டேப்லெட் 2ஜி கொண்ட ஜிஎஸ்எம் மற்றும் யுஎம்டிஎஸ் போன்றவற்றை சப்போர்ட் செய்கிறது. அடுத்ததாக 3ஜி வசதிகளான எல்லா எச்டிபிஎ, எச்எஸ்யுபிஎ, மற்றும் எட்ஜ் ப்ரோட்டோகால்கள் போன்றவற்றையும் சப்போர்ட் செய்கிறது.
மேலும் பொழுது போக்கு அம்சங்களைப் பார்த்தால் இந்த இசட்டிஇ டேப்லெட் பலவித பார்மட்டுகளைக் கொண்ட வீடியோ மற்றும் ஆடியோ ப்ளேயர்களைக் கொண்டிருக்கிறது. மேலும் இது வீடியோ கேமை சப்போர்ட் செய்யும். அடுத்ததாக இதில் எப்எம் ரேடியோவும் உண்டு.
மின் திறனிற்காக இந்த டேப்லெட் 3400 மெகா ஹெர்ட்ஸ் கொண்ட பேட்டரியைக் கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட்டின் மொத்த பரப்பு 202 x 122 x 12.6 மிமீ ஆகும். பேட்டரியையும் சேர்த்து இதன் மொத்த எடை 389 கிராம்கள் மட்டுமே. இது ஆன்ட்ராய்டு 2.3.5 இயங்கு தளத்தில் இயங்குகிறது. அதுபோல் இது க்வல்காம் சிபியுவைக் கொண்டுள்ளது. மேலும் இது 1000 மெகா ஹெர்ட்ஸ் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது.
மேலும் இந்த டேப்லெட் டபுள்யுஎபி 2.0/எச்டிஎம்எல் மற்றும் ப்ளாஷ் போன்ற பொதுவான ப்ரவுசர்களை சப்போர்ட் செய்யும். அதுபோல் துணை ஜிபிஎஸ் வசதிகளான ஜியோ டேக்கிங் க்யிக் ஜிபிஎஸ் மற்றும் அசிஸ்டட் ஜிபிஎஸ் போன்றவற்றையும் இந்த டேப்லெட் சப்போர்ட் செய்யும்.
இந்த டேப்லெட்டில் நெட்வொர்க்கை ப்ரவுஸ் செய்வதும் அதுபோல் தகவல் பரிமாற்றம் செய்வதும் மிக எளிதாக இருக்கும். இதன் விலை ரூ.20,000 ஆகும். இந்த டேப்லெட்  வாடிக்கையாளர்களைப் பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் பிப்ரவரியில் இந்த டேப்லெட் சந்தைக்கு வரும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget