ஏப்ரலில் பிரசன்னாவை மணக்கிறார் சினேகா

விரைவில் திருமணம் என்று பிரசன்னா அறிவிக்க, அதெல்லாம் கிடையாது இப்போதைக்கு திருமணம் இல்லை என்று வெடி கொளுத்திப் போட்டார் சினேகா. இந்த‌க் காதலும் அவ்வளவுதானோ என்று கோடம்பாக்கம் காஸிப் படிக்க ஆரம்பித்தாலும் காதலில் உறுதியாகதான் இருக்கிறார்கள் இருவரும்.


இவர்களின் இருவ‌ரின் திருமணத்தை வரும் ஏப்ரலில் நடத்த இரு வீட்டாரும் சேர்ந்து முடிவு செய்திருக்கிறார்கள்.
சினேகா இப்போது ர‌ஜினியின் கோச்சடையான் உள்பட நான்குப் படங்களில் நடித்து வருகிறார். திருமணத்துக்கு முன் அந்தப் படங்களின் படப்பிடிப்பு முடிந்து விடுமா?


இதுமாதி‌ரி நேரங்களில் சம்பந்தப்பட்ட தயா‌ரிப்பாளர்கள் டென்ஷனில் நகம் கடித்துக் கொண்டிருப்பார்கள். திருமணம், ஹனிமூன் என்று நடிகை உலகம் சுற்ற கிளம்பினால் படத்தை எப்படி முடிப்பது? ஆனால் சினேகாவை ஒப்பந்தம் செய்திருப்பவர்கள் ‌ரிலாக்ஸாக இருக்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகு சினேகா நடிப்பதையே விரும்புகிறேன் என்று பிரசன்னா அறிவித்திருப்பதே இந்த ‌ரிலாக்ஸ் மூடுக்கு காரணம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget