விண்டோஸில் இருக்கும் காலேண்டர் நமக்கு பயன்பட்டாலும் சில அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால் இந்த காலேண்டர் மென்பொருள் பல வசதிகளை கொண்டுள்ளது. Calendar Magic என்னும் இந்த மென்பொருளை நிறுவிய பின் எந்த நாடு பின் எந்த ஊர் அல்லது நகரம் என தேர்ந்தேடுத்து கொள்ளலாம். நாம் அதிகமாக பயன்படுத்தும் ஆங்கில காலேண்டர் முதல் பல காலேண்டர் வசதிகள் உள்ளன.நமக்கு எது வேண்டுமென நாம் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
இது நமது தமிழ் மாதங்களுக்கு இணையான நாட்களையும் காட்டுகிறது. மேலும் நமது ஹிந்து பண்டிகைகள் போன்றவற்றையும் காட்டுகிறது. 2000 முதல் 2040 வரை ஹிந்து பண்டிகைகளை காட்டுகிறது. இது காலேண்டர் மட்டுமல்லாமல் மேலும் பல வசதிகளை கொண்டுள்ளது.
இயங்குதளம்: வெற்றி 9x/ME/NT/2K / எக்ஸ்பி / 2K3 / விஸ்டா / 7
Size:4.32MB |