கண்டதும் காணாததும் திரை முன்னோட்டம்


எஸ்.பி. பிலிம்ஸ் தயா‌ரிப்பில் வெளிவரும் முதல் படம். எஸ். சங்கர நாராயணன், எஸ்.இந்து தயா‌ரித்துள்ளனர்.
சீலன் என்பவர் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இதுவொரு கல்லூரி காதல் கதை. இதில் இளைஞர்களுக்கான ஸ்ட்ராங்கான மெசே‌ஜ் இருக்கிறது என்கிறார் சீலன்.
இவர் பல இயக்குனர்களிடம் மட்டுமின்றி கேமராமேன் விஜய் மில்டனிடமும் பணியாற்றியிருக்கிறார்.


கல்லூ‌ரியில் ஒன்றாகப் படிக்கும் ஹீரோவும், ஹீரோயினும் நட்பாகப் பழகுகிறார்கள். இந்த நட்பு ஒரு தவறான பு‌ரிதலால் முறி‌ந்து போகிறது. பிறகு என்ன நடந்தது என்பதை சுவாரஸியமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் என்று திருப்தியுடன் பேசுகிறார் தயா‌ரிப்பாளர். படத்தின் எடிட்டிங், டிஐ என அனைத்தையும் தங்கள் அலுவலகத்திலேயே முடித்திருக்கிறார்கள் என்பது ஆச்ச‌ரியமான விஷயம். 


வி.ஏ.சார்லி படத்துக்கு இசையமைத்துள்ளார். பிரபல நடன இயக்குனர் ஜான்பாபுவின் மகன் விகாஷ் ஹீரோவாக நடித்துள்ளார். இது அவருக்கு இரண்டாவது படம்.


யு சான்றிதழ் பெற்ற இப்படம் வரும் 18ஆம் தேதி திரைக்கு வருகிறது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget