சந்திரமுகி, அருந்ததீ, காஞ்சனா வரிசையில்...னு விளம்பரம் பார்த்துட்டு திகிலை எதிர்பார்த்து இந்த படத்துக்கு போனீங்கன்னா... கடுப்போட திரும்பி வருவீங்க. மலையாளத்துல் வந்த யாட்சியும் ஞானும் (மோகினியும் நானும்) படத்தோட தமிழ் டப்பிங்தான் ஜக்கம்மா.
ஒரு மந்திரியோட பொண்ணை ஜானின்னு ஒரு பையன் காதலிக்க, அது பிடிக்காத மந்திரியும், அவர் பையனும் அவளை கொல்ல ஷ்யாம்னு ஒரு அடியாளை அனுப்பி வைக்கிறாங்க. வேலை முடிஞ்சதும் கந்தர்வபுரத்துல இருக்கிற மந்திரிக்கு சொந்தமான பாழடைஞ்ச பங்களாவுல கொஞ்ச நாளைக்கு மறைஞ்சிருக்க சொல்றாங்க. ஆனா... ஜானியை கொல்லாம, மந்திரிகிட்டே பொய் சொல்லிட்டு பங்களாவுல போய் தங்குறான் ஷ்யாம். அப்போ அங்கே வர்ற அந்த ஊரைச் சேர்ந்த ஆர்த்திங்கற(மேக்னாராஜ்) பொண்ணு இவன்கிட்டே நெருங்கிப் பழக, இருண்டு பேருக்கும் காதல் வருது.
இதற்கிடையில மந்திரிக்கு தான் சாகற மாதிரி அடிக்கடி கெட்ட கனவுகள் வர... அவரும், அவர் பையனும் கந்தர்வபுரத்துக்கு காரணம் தேடி வர்றாங்க. மந்திரியோட நண்பரான ஒரு சாமியார்கிட்டே காரணம் கேட்க, நீ செஞ்ச பாவத்துக்கு ஜக்கம்மா உன்னை பழிவாங்கத் துடிக்கிறான்னு சொல்றார். அந்த நேரத்துல ஷ்யாம்கிட்டே ஆர்த்தி நான் ஒரு மோகினி. போன பிறவியில நீதான் என்னோட காதலன். நம்ம ரெண்டுபேரையும் இந்த மந்திரிதான் சாகடிச்சான். அவனை பழிவாங்கத்தான் இப்போ ஜக்கம்மாவா வந்திருக்கேன்னு ஒரு ப்ளாஷ்பேக் சொல்றாங்க. இந்த நிலைமையில் ஜானி திரும்பி வர, கோபமான மந்திரி, ஷ்யாமை கொல்ல ஆள்அனுப்புறார். அப்படியே ஜக்கம்மாவை விரட்ட, சாமியாரை வைச்சு பூஜையும் நடத்துறார். பூஜையோட பலனால ஜக்கம்மா மந்திரியை கொல்ல முடியாம வருத்தப்பட்டு மறைஞ்சு போக... கடுப்பாற ஷ்யாம் மந்திரியை குத்தி கொல்றான். படம் முடியுது.
பாடல் காட்சிகளில் மேக்னராஜ் பாவாடை சட்டையில் வந்து குதிச்சு, குதிச்சு கண்ணுக்கு அழகா டான்ஸ் ஆடுறாங்க. அதுமட்டும் இல்லைன்னா ரசிகர்கள் தியேட்டர் சீட்டை கிழிச்சிருப்பாங்க. ரெட்ஒன் கேமரால எடுக்கப்பட்ட முதல் மலையாளப்படம்ங்கிறதை தவிர இந்த படத்தை பத்தி சொல்ல எதுவுமில்லை.
மொத்தத்தில் "ஜக்கம்மா" - செம... "மொக்கம்மா!"