ஆர்யாவுக்கு யோகா மாஸ்டரான அனுஷ்கா!


யோக கலையில் வல்லவரான அனுஷ்கா, உள்ளூர் மற்றும் அவுட்டோர் படப்பிடிப்புகளில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் யோகா செய்வதற்கென்று தனி நேரம் ஒதுக்கி விடுவாராம். சமீபத்தில் செல்வராகவனின் இரண்டாம் உலகம் படப்பிடிப்புக்கு ஜார்ஜியா காட்டுக்கு சென்றபோதுகூட, தினமும் காலை எழுந்ததும் யோகா முடித்தபிறகுதான் நான் ஸ்பாட்டுக்கே வருவேன் என்று கண்டிசனாக சொல்லி விட்டாராம். அவரது பழக்கவழக்கங்களை தெரிந்த செல்வராகவனும் அதற்கு தடைவிதிக்கவில்லையாம்.
ஆனால் அனுஷ்கா வரும்போதுதான் ஆர்யாவுக்கு ஸ்பாட்டில் வேலை என்பதால், அதுவரைக்கும் அனுஷ்கா யோகா செய்வதை வேடிக்கை பார்ப்பாராம. அப்போது யோகா செய்வதால் உடம்புக்கும், மனதுக்கும் கிடைக்கிற நற்பலன்கள் பற்றி அனுஷ்கா விளக்கியபோது ஆர்யாவுக்கும் யோகா மீது ஈர்ப்பு ஏற்பட்டு விட்டதாம். அதனால் அவ்வப்போது சின்னச்சின்ன யோக கலைகளை அவரிடம் பயிற்சி எடுத்திருக்கிறார். அதன் பலன் சிறப்பாக இருந்ததை உணர்ந்த ஆர்யா, அதன்பிறகு ஜிம்மிற்கு செல்வதை நிறுத்தி விட்டு, தினமும் அனுஷ்கா பாணியில் யோகாவை செய்யத்தொடங்கி விட்டாராம். சென்னை திரும்பியபிறகு அனுஷ்கா சொல்லித்தரும் யோகா சாதாரணமல்ல, அருமருந்து என்று தனது சினிமா நண்பர்களிடம் பெருமையாக சொல்லி வருகிறார் ஆர்யா.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget