தமிழில் தட்டச்சு செய்ய புதிய அப்டேஷனை வழங்கும் எச்டிசி


புதிய சாஃப்ட்வேர் அப்டேஷன் மூலம் பல திருப்புமுனைகளை ஸ்மார்ட்போன் உலகில் நிகழ்த்த இருக்கிறது எச்டிசி நிறுவனம். தனது புதிய ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போனில் சென்ஸ் யூஐ சாஃப்ட்வேரை அப்டேட் செய்கிறது எச்டிசி நிறுவனம். இந்த சாஃப்ட்வேர் அப்டேஷன் மூலம் என்னென்ன தொழில் நுட்ப வசதிகளை பெற முடியும் என்பதையும் பார்க்கலாம்.

முதல் படியாக இதில்
  • ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷனை எளிதாக பெறலாம்.
  • இந்த ஸ்மார்ட்போனின் செயல்பாட்டு திறன் அதிகரித்துள்ளதை, பயன்படுத்தும் போது வெகுவாக உணர முடியும்.
  • பிரவுசிங் செய்யும் போது கூட அதி வேகத்தில் தகவல்களை பெறலாம் என்று கருதப்படுகிறது.
  • பேஸ்புக் பக்கத்தில் நுழைய ஒவ்வொருமுறையும் ஃபேஸ்புக்கை திறக்க வேண்டியதில்லை. இதன் மூலம் எளிதாக ஃபேஸ்புக் பக்கங்களை திருப்பலாம்.
  • மியூசிக் வசதியினை பெற மேம்படுத்தப்பட்ட சில தொழில் நுட்ப வசதிகளும் இந்த எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போனில் வழங்கப்படுகிறது.
  • இந்த ஸ்மார்ட்போனில் சாஃப்ட்வேர் டெவலப்மென்ட் கிட் பயன்படுத்தப்பட உள்ளது.
  • சாஃப்ட்வேர் டெவலப்மென்ட் கிட் சப்போர்ட்டை இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம் என்பதால் தமிழ், ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளில் எளிதாக டைப் செய்ய இதில் பிரத்தியேக கீபோர்ட் வசதியினையும் பயன்படுத்தலாம். இந்த வசதி ஒரு சிறப்பு அம்சம்.

ஏனெனில் பொதுவாக தொழில் நுட்ப வசதிகளை தமிழ் மொழியில் பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்பு இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது தமிழ் மொழியில் வசதிகளை பயன்படுத்த நிறைய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

அந்த வாய்ப்பினை எச்டிசி நிறுவனம் தனது ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போனில் புதிய யூஐ அப்டேஷன் மூலம் பெறலாம். இந்த ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேஷன் பற்றிய பேச்சு அடிபடுகிறது. ஆனால் ஜெல்லி பீன் அப்டேஷன் இன்னும் 2, 3 மாதங்களில் பெறலாம் என்று கருதப்படுகிறது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget