இந்திய சினிமாவின் உச்சம் என்று சில ப்ளாக்கர்கள் பார்ஃபி படத்தை கொண்டாடுகிறார்கள். ரன்பீர் கபூர், ப்ரியங்கா சோப்ரா, இலியானா நடித்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்புகிறது. இலியானாவுக்கு இது முதல் இந்திப் படம். அமிதாப்பச்சன் முதல் படத்திலேயே இலியானாவின் நடிப்பு நன்றாக இருக்கிறது என்று பாராட்டியிருக்கிறார். இதுபோல் பாலிவுட் பிரபலங்கள் பலரும் வாழ்த்தியிருக்கிறார்கள்.
அசினுக்கு பிறகு தென்னிந்தியாவிலிருந்து சென்ற ஒரு நடிகைக்கு இப்படியொரு பிரமாதமான வரவேற்பு கிடைப்பது இலியானாவுக்கே. தமிழ்ப் படங்களில் நடிக்காமல் தவிர்த்து வந்த இலியானா இனி தெலுங்குப் படங்களையும் தவிர்த்து இந்தியில் செட்டிலாவார் என்கிறார்கள். அவரின் பேட்டிகளும் அதையே உறுதி செய்கிறது.
ஆந்திரா ரசிகர்களுக்கு இது இழப்புதான்.